முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஆஸ்திரேலியர்கள் அதிகம் வெறுக்கும் இந்திய வீரர் இவர்தான்’ – ஆஸி. பவுலர் ஓபன் டாக்

‘ஆஸ்திரேலியர்கள் அதிகம் வெறுக்கும் இந்திய வீரர் இவர்தான்’ – ஆஸி. பவுலர் ஓபன் டாக்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

அவருடைய விக்கெட்டை மட்டும் கைப்பற்றினாலே போதும், நம்முடைய வேலை முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் அதிகம் வெறுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் குறித்து பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேஸல்வுட் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பேட்டிகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸல்வுட் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணயின் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்துவதுதான் மிகுந்த சிரமமாக இருக்கும். அவர் அவ்வளவு சீக்கிரத்தில் ஆட்டமிழக்க மாட்டார். அவருடைய விக்கெட்டை மட்டும் கைப்பற்றினாலே போதும், நம்முடைய வேலை முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்ளலாம். நான் தனிப்பட்ட முறையில் புஜாராவை பலதடவை சீண்டியுள்ளேன். அவர் எதையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்.

top videos

    ஆஸ்திரேலியர்கள் அதிகம் வெறுக்கும் இந்திய கிரிக்கெட் வீரராக புஜாரா இருக்கிறார். ஆனால் அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 35 வயதாகும் புஜாரா இந்திய அணிக்காக 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

    First published:

    Tags: Cricket