ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸி. நிதான தொடக்கம்… முதல் நாள் ஆட்டம் நிறைவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸி. நிதான தொடக்கம்… முதல் நாள் ஆட்டம் நிறைவு

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் லபுஸ்சேன் - உஸ்மான் கவாஜா

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் லபுஸ்சேன் - உஸ்மான் கவாஜா

2ஆவது விக்கெட்டுக்கு கவாஜாவும், லபுஸ்சேனும் 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ஆன்ரிக் நார்ட்ஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் 47 ஓவர்களுடன் நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ள நிலையில் 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினர்.

கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த வார்னர் இந்த போட்டியில் 2 பவுண்டரியுடன் 10 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட் விழுந்து தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உஸ்மான் கவாஜாவுடன் மார்னஸ் லபுஸ்சேன் இணைந்து விளையாடினார். இருவரும் மிகுந்த நிதானத்துடன் விளையாடியதால் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.

151 பந்துகளை எதிர்கொண்ட லபுஸ்சேன் 13 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்திருந்போது, நார்ட்ஜ் பந்து வீச்சில் கீப்பர் வெரேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

2ஆவது விக்கெட்டுக்கு கவாஜாவும், லபுஸ்சேனும் 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 121 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் கவாஜா 54 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

கூடுதல் சிகிச்சைக்காக ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்… டெல்லி கிரிக்கெட் சங்கம் தகவல்

47 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்திருந்தது. அப்போது போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

விதைக்கப்பட்ட கறுப்பு முத்து.. மக்களின் கண்ணீருடன் விடைபெற்ற பீலே..!

தென்னாப்பிரிக்கா தரப்பில் ஆன்ரிக் நார்ட்ஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர். நாளை இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குகிறது.

First published:

Tags: Australia, Cricket, South Africa