முகப்பு /செய்தி /விளையாட்டு / WTC Final : ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேஸல்வுட் போட்டியிலிருந்து விலகல்… இந்திய அணிக்கு சாதகமா?

WTC Final : ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேஸல்வுட் போட்டியிலிருந்து விலகல்… இந்திய அணிக்கு சாதகமா?

ஜோஷ் ஹேஸல்வுட்

ஜோஷ் ஹேஸல்வுட்

இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேஸல்வுட் விலகியுள்ளார். இந்த நிகழ்வு இந்திய அணிக்கு சாதகத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் வரும் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பை எதையும் வெல்லாத நிலையில், இந்த கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்படுகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியில் இருந்து காயம் காரணமாக ஜோஷ் ஹேஸல்வுட் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் நெசர் அணியில் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் மிக்க ஆட்டக்காரரான ஹேஸல்வுட்டின் விலகல் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவையும், இந்திய அணிக்கு சாதகமாகவும் அமையும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளார்கள். காயம் குணமடைந்து வரும் ஹேஸல்வுட் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாட தயார் ஆகுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - 2 ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கனை வென்றது இலங்கை அணி… தொடரில் சமநிலை

இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடவுள்ளன.

இதில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்- ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே எல் ராகுல், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் .

First published:

Tags: Cricket