முகப்பு /செய்தி /விளையாட்டு / WTC Final : ‘ஆஸ்திரேலியாவுக்கு இணையாக இந்திய அணியின் பந்துவீச்சு இருக்கும்’- கிரேக் சேப்பல் கருத்து

WTC Final : ‘ஆஸ்திரேலியாவுக்கு இணையாக இந்திய அணியின் பந்துவீச்சு இருக்கும்’- கிரேக் சேப்பல் கருத்து

முகமது ஷமி

முகமது ஷமி

ஜடேஜாவின் பேட்டிங் அற்புதமாக உள்ளது. அஷ்வின் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய பவுலர்களின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரும் 7 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கோப்பைக்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த 5 நாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் கூறியதாவது-

இந்திய பவுலர்களின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. ஷமி, சிராஜ் ஆகியோர் தங்களது திறமையை பல முறை நிரூபித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் இவர்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர்களால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆஸ்திரேலியாவுக்கு இணையாக இந்திய அணியின் பந்து வீச்சு இருக்கும். அஷ்வின் மற்றும் ஜடேஜா என 2 சுழல் பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்க வேண்டும். ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும், அதிக ரன்களை விட்டுக் கொடுக்க மாட்டார். அவரது பேட்டிங் அற்புதமாக உள்ளது. அஷ்வின் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவர். இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Cricket