முகப்பு /செய்தி /விளையாட்டு / டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போகும் டேவிட் வார்னர்…. எப்போது தெரியுமா?

டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போகும் டேவிட் வார்னர்…. எப்போது தெரியுமா?

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

என்னைப் பொருத்தளவில் நான் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன். அது டெல்லி அணியாகவோ அல்லது மற்ற அணிகளாகவோ இருக்கலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் விரைவில் ஓய்வு பெறவுள்ளார். இதுதொடர்பாக தனது விருப்பத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவாக இருக்கும் டேவிட் வார்னர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகை ஃபார்மேட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருககிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் கேப்டனாக இடம்பெற்றிருந்த டெல்லி அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் தனியொருவனாக டெல்லி அணிக்காக ரன் குவிப்பில் ஈடுபட்டார் வார்னர்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- கிரிக்கெட்டில் நீங்கள் பேட்ஸ்மேனாக இருந்தால் ரன் குவிப்பவராக இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனது குடும்பத்திற்கும் நான் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது.

நிச்சயமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் நான் விளையாட மாட்டேன். என்னைப் பொருத்தளவில் நான் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன். அது டெல்லி அணியாகவோ அல்லது மற்ற அணிகளாகவோ இருக்கலாம். எங்கு இருந்தாலும் கிரிக்கெட்டுடன் நான் தொடர்பில் இருப்பேன்.

இதையும் படிங்க - இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கன் அணி வெற்றி…

இப்போது என் கவனம் முழுவதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மீது உள்ளது. அதன்பின்னர் ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும். இவற்றை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் உடனான தொடருடன் டெஸ்ட் பயணத்தை நிறைவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Cricket