முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘பிடித்த மைதானம்? சென்னை சேப்பாக்கம்’ – வைரலாகும் சச்சினின் ட்விட்டர் பதிவு

‘பிடித்த மைதானம்? சென்னை சேப்பாக்கம்’ – வைரலாகும் சச்சினின் ட்விட்டர் பதிவு

சேப்பாக்கம் மைதானம் - சச்சின் டெண்டுல்கர்

சேப்பாக்கம் மைதானம் - சச்சின் டெண்டுல்கர்

நீங்கள்தான் சச்சின் என்று எப்படி நாங்கள் நம்புவது என்று ஒருவர் கேட்க, இப்போதைக்கு இதுதான் எனது ட்விட்டர் ப்ளூ டிக் என்று, செல்ஃபி ஒன்றை சச்சின் வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்பை வான்கிடே மைதானத்திற்கு அடுத்ததாக பிடித்த மைதானம் எது என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு சென்னை சேப்பாக்கம் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் #AskSachin என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டு அதன்கீழ் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். இப்போது ட்விட்டரில் ப்ளூ டிக்கை நீக்கி விட்டார்கள். நீங்கள்தான் சச்சின் என்று எப்படி நாங்கள் நம்புவது என்று ஒருவர் கேட்க, இப்போதைக்கு இதுதான் எனது ட்விட்டர் ப்ளூ டிக் என்று, செல்ஃபி ஒன்றை சச்சின் வெளியிட்டுள்ளார்.

அசோக் ராகவன் என்பவர் மும்பை வான்கிடே மைதானத்திற்கு அடுத்தபடியாக உங்களுக்கு பிடித்தமான மைதானம் என்று கேட்க அதற்கு சென்னை சேப்பாக்கம் என்று சச்சின் பதில் அளித்துள்ளார். இதனை சென்னை மற்றும் தமிழக ட்விட்டர் பயனாளிகள் வைரலாகியுள்ளனர். இந்த பதிவின் கீழ் நெட்டிசன்கள் எழுதியுள்ள கமென்ட்டுகள் ரசிக்கும்படி உள்ளன. தொடர்ந்து ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சச்சின் பதில் அளித்துள்ளார். தோனியைப் பற்றி ஒருவார்த்தை சொல்லுங்களேன் என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு எம்.எஸ். என்றுதான் நான் தோனியை எப்போதும் அழைப்பதாக கூறியுள்ளார் சச்சின்.

சூர்யாவுடன் சச்சின் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ரசிகர் ஒருவர் இந்த சந்திப்பு குறித்து சொல்லுங்களேன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சச்சின், ‘முதலில் நாங்கள் சந்தித்தபோது இருவரும் கூச்ச சுபாவத்துடன் இருந்தோம். இருவரும் மற்றவருக்கு ஆரம்பத்தில் எந்த தொந்தரவு கொடுக்கவில்லை. பின்னர் சூர்யாவுடன் நீண்ட நேரம் பேசினேன். நல்ல உரையாடலாக இந்த சந்திப்பு இருந்தது.’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket