இந்த குட்டி கிரிக்கெட் வீரர் பெயர் அங்கன் குயிலா. இவர் மேற்கு வங்கத்தின் மேற்கு மந்திபூரில் உள்ள எக்தார்பூரில் வசிப்பவர். இரண்டரை வயதிலிருந்தே கிரிக்கெட் மீது நாட்டம் கொண்டவரான இச்சிறுவன் விராட் கோலியின் ஆட்டத்தை டிவியில் பார்த்துவிட்டு, கிரிக்கெட் விளையாட்டின் தீவிர அடிமையாகவே மாறிவிட்டார்.
8 வயதான அங்கன் குயிலா தற்போது தண்டன் என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் பயிற்சி முகாமில் கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார். இவரது தந்தை கலாசந்த் குயிலா சிறிய துணிக்கடை வைத்துள்ளார். அம்மா ரம்பா குயிலா ஒரு எளிய இல்லத்தரசி. அன்கன் குறித்து அவரது தந்தை கூறுகையில், “சிறு வயதிலிருந்தே அன்கன்னின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை நாங்கள் கவனித்தோம். அப்போதெல்லாம் அவர் எல்லா விளையாட்டுகளையும் விளையாடுவார். ஆனால் , அவருக்கு கிரிக்கெட்டில் தனி ஆர்வம் உண்டு.
ஒரு பேட் வேண்டும் என எங்களை நச்சரித்தார். அதை வாங்கி கொடுத்ததில் இருந்து அவருடைய ஆர்வம் இரட்டிப்பானது. தொடர்ந்து அவரை பயிற்சியாளரிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்தோம்" என்றார்.
ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த சிறுவன் அன்கன், கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் மற்றும் அவரது பேட்டிங் திறமையால் பலரை ஈர்த்துள்ளார். படிப்புடன், அவர் வீட்டிலேயே தொடர்ந்து ஆர்வத்துடன் கிரிக்கெட் பயிற்சியை செய்கிறார். வளர்ந்ததும், விராட் கோலியைப் போல இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட விரும்புகிறார். அவரது பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு உதவி செய்கின்றனர்.
இதையும் படிங்க: இது புதுசா இருக்கே.. ஏடிஎம் மூலம் பால் விற்பனை... மேனேஜர் வேலையை உதறிவிட்டு புது ஐடியா மூலம் சாதித்த நபர்..!
அவரது பயிற்சியாளர் சஞ்சய் பத்ரா அங்கன் மீது அதீத நம்பிக்கையும் கவனமும் கொண்டுள்ளார். அன்கன் குறித்து அவர் கூறுகையில், “இவ்வளவு இளம் வயதில் கிரிக்கெட் மீது அங்கன் மோகமும் ஆர்வமும் அரிது. அவர் இப்போதே கவர் டிரைவ் மற்றும் ஸ்கொயர் டிரைவ் நன்றாக விளையாடுகிறார். சில சமயங்களில் அதை பார்த்து நமக்கு ஆச்சரியமாக இருக்கும். நாள் முழுவதும் அவர் கிரிக்கெட்டை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரை இந்தியாவின் அடுத்த விராட் கோலியாக பார்க்க விரும்புகிறேன் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Virat Kohli