முகப்பு /செய்தி /விளையாட்டு / 2011 உலகக்கோப்பை வெற்றியை நினைவுகூர்ந்த இந்திய அணி வீரர்கள்… சமூக வலைதள பதிவுகள் வைரல்

2011 உலகக்கோப்பை வெற்றியை நினைவுகூர்ந்த இந்திய அணி வீரர்கள்… சமூக வலைதள பதிவுகள் வைரல்

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி.

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி.

இறுதிப் போட்டியில் இந்திய அணியில் சேவாக், சச்சின், காம்பீர், கோலி, தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முனாஃப் படேல், ஸ்ரீசாந்த் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2011-ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி இதே நாளில் வென்றதை வீரர்கள் நினைவு கூர்ந்தனர். இதுதொடர்பான சமூக வலைதள பதிவுகள் இன்று வைரலாகின. இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் விளையாடியபோது உலகக்கோப்பையை வென்றது. இதன்பின்னர் 28 ஆண்டுகள் கழித்து, 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக மகேலா ஜெயவர்த்தனே 103 ரன்களும், குமார் சங்கக்கரா 48 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜாகிர் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கவுதம் காம்பிர் 97 ரன்னும் கேப்டன் தோனி 91 ரன்களும் குவித்தனர். நுவான் குலசேகரா வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பி தோனி வின்னிங் ஷாட்டை அடித்தார். மறு முனையில் அவருக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை யுவராஜ் சிங் வழங்கினார்.

இந்திய அணி உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் சமூக வலைதளங்களில் நினைவுகளை பகிர்ந்துள்ளனர். இறுதிப் போட்டியில் இந்திய அணியில் வீரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், கவுதம் காம்பீர், விராட் கோலி, தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முனாஃப் படேல், ஸ்ரீசாந்த் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

First published:

Tags: Cricket