முகப்பு /செய்தி /விளையாட்டு / பெரிய எல்.இ.டி. திரை.. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல்.. கட்டண விவரம் இதோ!

பெரிய எல்.இ.டி. திரை.. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல்.. கட்டண விவரம் இதோ!

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடங்கி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் சூப்பர் அறிவிப்பு ஒன்றை சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

நாளை முதல் சென்னையில் உள்ள ஐந்து மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனல்பறக்கும் சம்மரில் நம்மை குளுமையாக்க 16 வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் கொண்டாடப்படவுள்ளது. 70 லீக் போட்டிகள், 3 பிளே ஆஃப் ஆட்டங்கள், என சாம்பியன் பட்டத்தை பெற 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மைதானம் மற்றும் எதிரணி மைதானங்களில் போட்டிகள் நடைபெறுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.

காயத்தால் விளையாட ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஹர்த்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைடன்ஸ், தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோஹித் தலைமையில் மும்பை இண்டியன்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஷிகர் தவன் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ், நிதிஷ் ரானா தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டு பிளஸி தலைமையில் ராயல் சேலர்ஞ்சர்ஸ் பெங்களூரு, மார்க்ரம் தலைமையில் சன் ரைசஸ் ஹைதராபாத், ராகுல் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட், வார்னர் தலைமையில் டெல்லி கேப்பிடஸ் என 10 கேப்டன்கள் கோப்பைக்காக மல்லுகட்டவுள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடங்கி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் சூப்பர் அறிவிப்பு ஒன்றை சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் சென்னையில் உள்ள ஐந்து மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

top videos

    நந்தனம், வடபழனி, விம்கோ நகர், திருமங்கலம் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்களில் உள்ள ராட்சத எல்.இ.டி திரைகளில் நேரடியாக திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிகளைப் பார்ப்பதற்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் தங்கும் கட்டணமாக 1 மணி நேரத்துக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: IPL 2023