கன்னி 22 ஆகஸ்ட் - 23 செப்டம்பர்

Share: Facebook Twitter Linkedin
புதன் கிரகத்தால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் பண்புகள்

நடத்தை மற்றும் ஆளுமையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக கடின உழைப்பாளி மற்றும் புத்திசாலியாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு தேவை ஏற்படும் நேரங்களில் இவர்கள் உதவ சற்றும் தயங்கமாட்டார்கள். எந்தவித கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் வெளியே வருவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

கன்னி ராசியின் அடையாளம் : : கன்னி ராசியை குறிக்கும் அடையளமாக ஒரு பெண்ணின் சின்னம் உள்ளது. கன்னி என்பதை குறிக்கும் விதமாக பெண்ணின் அடையாளம் பெற்றுள்ளது. எனவே கன்னி ராசிக்காரர்கள் ஒரு போதும் தேவைப்படும் நேரங்களில் மற்றவர்களுக்கு உதவுவதில் பின்வாங்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

உடல் அமைப்பு : : இந்த ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக வளைந்த மற்றும் பரந்த கைகளை கொண்டவர்கள். அவர்களின் கட்டைவிரல் சற்று சின்னதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாக முதுகு, கழுத்து, தோள்கள் அல்லது கன்னங்களில் மச்சங்களை கொண்டிருப்பார்கள்.

கன்னி ராசிக்கார்களின் பண்புகள் : : மர்மமாக இருப்பதோடு, கன்னி ராசிக்கார்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப விஷயங்களை வடிவமைப்பதில் மிகவும் திறமையானவர்கள். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் சொந்த முடிவாலும், அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய விரும்புகிறார்கள். இதன் காரணமாக மற்றவர்கள் அவர்களை சோம்பேறி என தவறுதலாக புரிந்து கொள்ள நேரிடலாம்.

பொழுபோக்குகள் : : கன்னி ராசியில் பிறந்தவர்கள் இயற்கையோடு மிகவும் நெருக்கமாக தொடர்புடையவர்கள். அதனால்தான் தோட்டக்கலை சம்பந்தப்பட்ட நபர்களின் விருப்பமான பொழுதுபோக்காக உள்ளது. இது தவிர, அவர்கள் வாசிப்பு, எழுதுதல், கையெழுத்து, சமையல் மற்றும் பலவற்றிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கன்னி ராசிக்காரர்களின் குறைகள் : : இந்த ராசிக்காரர்கள் ஓரளவு சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். மற்றவர்களை கேலி செய்து மகிழ்ச்சியடைவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சற்று சோம்பேறித்தனம் இருப்பதால் அவர்களின் பெரும்பலான பணிகளை செய்ய தவறிவிடுகிறார்கள்.

கல்வி மற்றும் தொழில் : : கன்னி ராசிக்காரர்கள் கல்வியில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். இதனால் அவர்கள் எந்த துறையை எடுத்தாலும் பாராட்டுகளை பெறுவார்கள். கன்னி ராசிக்காரர்கள் ஒரு சிறந்த நிர்வாகியாக அவர்களால் இருக்க முடியாது. வர்த்தக துறையிலும் அவர்களால் அதிக முன்னேற்றம் காண முடியாது.

காதல் வாழ்க்கை : : கன்னி ராசிக்கார்கள் தங்களை முழுமையாக அவர்களது துணைக்கு அர்ப்பணிக்கவும், எப்போதும் அவர்களை மகிழ்விக்க விரும்புகிறார்கள். சொந்ங்களுடன் இவர்கள் இருக்கும் போது மற்றவர்களின் மகிழ்ச்சியில் அக்கறை செலுத்துவார்கள்.

திருமண வாழ்க்கை : : கன்னி ராசி பொதுவாக மகரம் மற்றும் விருச்சிகம் ராசியை கொண்டவர்களோடு பொருந்தும். இதன் காரணமாக அவர்கள் திருமண வாழ்க்கை அமைதியாக அமையும். குடும்ப உறுப்பினர்களுக்கு மற்றவர்களை விட முன்னுரிமை அளிப்பவர்களாக இருப்பார்கள்.

நட்பு வட்டாரம் : : இந்த ராசிக்கரார்கள் விருச்சிகம், துலாம் மற்றும் மகர ராசியை சேர்ந்தவர்களுடன் நன்றாக பழகும் தன்மை கொண்டவர்கள். மற்ற ராசிக்காரர்கள் இவர்களுடன் நட்பாக பழகினால் அவர்களுக்கு எளிதில் வாக்குவாதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : : 9

அதிர்ஷ்ட நிறம் : : பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் வெள்ளை

அதிர்ஷ்ட நாள் : : புதன்

அதிர்ஷ்ட ரத்தினம் : : முத்து மற்றும் மரகதம்

மேலும் படிக்க