தனுசு 23 நவம்பர் - 22 டிசம்பர்

Share: Facebook Twitter Linkedin
தனுசு ராசி - குணநலன், நடத்தை மற்றும் ஆளுமை

வியாழன் கிரகம் தனுசு ராசியின் ராசி அதிபதியாகும். மிக பெரும்பாலும், இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாவும், எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடனும் இருப்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டமுள்ள இவர்கள் புத்திசாலிகள். ஃபேஷனில் நாட்டமுள்ள தனுசு ராசிக்காரர்கள் விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள்.

குறியீடு: : தனுசின் பின் பகுதி குதிரை மற்றும் முன் பகுதி கையில் வில்லை வைத்திருக்கும் மனிதனாகவும் இருக்கும், ‘குதிரை மனிதன்’ என்றும் கூறலாம். இந்த குறியீடு தனுசு ராசிக்காரர்கள் ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ளவர்கள் என்பதை தெளிவாகக்காட்டுகிறது.

உடலமைப்பு: : இவர்கள் வலுவான உடலமைப்பைக் கொண்டிருப்பார்கள். தனுசு ராசிக்காரர்களின் தலைமுடி மிக உயர்ந்த தரத்திலும், கண்கள் மிகவும் பிரகாசமாக, பார்ப்போரை ஈர்க்கும் வண்ணமும் இருக்கும். இவர்களின் தனித்த குரல் மற்றவர்களிடம் இருந்து தனுசு ராசிக்காரர்களை வேறுபடுத்தி காட்டுகிறது.

குணநலன்கள்: : தனுசு ராசிக்காரர்கள் யாரையும், எதையும் எளிதில் நம்ப மாட்டார்கள். எல்லாவற்றிலும் பற்றி உள்ளார்ந்த ஆர்வத்தை கொண்டிருப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் அடிமைத்தனத்தையும், மற்றவரை சார்ந்து இருப்பதையும் கொஞ்சமும் விரும்ப மாட்டார்கள். எப்போதும் சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள்.

பொழுதுபோக்குகள் / விருப்பங்கள்: : தனுசு ராசிக்காரர்கள் பிறப்பிலேயே புத்தக காதலர்கள். புத்தகங்கள் மற்றும் நாவல்களைப் படிப்பது அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகள். அதோடு ஒருநாள் தொலைக்காட்சியில் இடம்பெற்று புகழ் பெற வேண்டும் என்ற கனவும் அவர்களுக்கு உண்டு. இது தவிர, சுற்றுலாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகளிலும் அவர்கள் அதிக அக்கறை காட்டுவார்கள்.

குறைகள்: : இவர்கள் மிக எளிதாக கோபப்படுவார்கள். தனுசு ராசியில் பிறந்தவர்கள் குடும்பப் பிணைப்புகளை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் அதிக அக்கறை காட்ட மாட்டார்கள். செலவாளி என்ற பெயரும் தனுசு ராசிக்காரர்களுக்கு உண்டு.

கல்வி மற்றும் தொழில்: : தனுசு ராசிக்காரர்கள் மருத்துவ அறிவியல், வானியல், அறிவியல் பாடங்கள் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். அதோடு வெற்றிகரமான அரசியல்வாதி, மனிதவள மேலாளர், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர், ஆசிரியர் உள்ளிட்ட பல துறைகளில் திறமையுடன் செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.

காதல் வாழ்க்கை: : இவர்கள் மகிழ்ச்சியான, வேடிக்கையான, அன்பான மனிதர்கள். காதலும் கற்பனையும் இவர்களிடம் மிகுந்து காணப்படும். திருமணத்தை ஒரு பொழுதுபோக்காக நினைக்கும் தனுசு ராசிக்காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்க திருமணம் செய்துக் கொள்வார்கள்.

திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை: : இவர்களுக்கு திருமண வாழ்க்கை வளமாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். அன்பை ஏற்றுக்கொள்ளும் தனுசு ராசிக்காரர்கள், அதை தங்கள் துணையுடன் நன்றாக பரிமாறிக் கொள்கிறார்கள். சிறுவயதிலிருந்தே வேதனையையும் துன்பத்தையும் அனுபவித்து, வளர்ந்தவுடன் நிலைமை மாறி எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள்: : மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுடன் நல்ல நட்பையும் நெருக்கத்தையும் பேணும் தனுசு ராசிக்காரர்கள், மிதுனம், துலாம், ரிஷபம் ஆகிய ராசியினருடன் விரோத போக்கைக் கொண்டிருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்: : 3

அதிர்ஷ்ட நிறம்: : மஞ்சள், வெளிர் வான் நீலம், வெளிர் பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா

அதிர்ஷ்ட நாள்: : வியாழக்கிழமை

அதிர்ஷ்ட கல்: : புஷ்பராகம்

மேலும் படிக்க