சிம்மம் 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

Share: Facebook Twitter Linkedin
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரிய கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக மரியாதை,

பெருமை, வலிமை, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் ஆகியவற்றை கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்ம ராசியின் அடையாளம் : : இந்த ராசியின் அடையாளமாக ஒரு சிங்கம் குறிக்கப்படுகிறது. ஒரு சிங்கத்தை போலவே இந்த ராசியை கொண்டவர்கள் மிகவும் வலிமையானவர்களாகவும் தைரியமானர்களாகவும் இருக்கிறார்கள்.

தோற்றம் : : சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாற்று சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்கார்களின் தலை சற்று பெரிதாக இருக்கும். கண்கள் மற்றும் முகப்பொழிவு பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களின் கண்ள் பிரகாசமாக இருக்கும்.

பொதுவான அமைப்பு: : சிம்ம ராசிக்காரர்கள் பெரும்பாலும் காதலில் தோல்வியை சந்திக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பொதுவாக வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்பு கொண்டவர்கள். இந்த ராசிக்கார்கள் மிகவும் நம்பிக்கையும், லட்சியமும் கொண்டவர்கள். அவர்கள் தங்களது பணியை மிகுந்த விடாமுயற்சியுடன் செய்கிறார்கள். யாருக்கும் வெறுப்புத்தன்மையை உண்டாக்க மாட்டார்கள்.

பொழுபோக்கு : : தூங்குவது, சினிமா பார்ப்பது. பல்வேறு பொருட்களை சேகரிப்பது. ஆடம்பரமான ஆடைகளை அணிவது மற்றும் சுவையான உணவுகளை சாப்பிடுவது ஆகியவை சிம்ம ராசிக்காரர்களின் சிறந்த பொழுபோக்காக இருக்கும்.

குணாதிசயம்: : சிம்ம ராசிக்கார்கள் நிகழ் காலத்தில் கவனம் செலுத்துவதை விட எதிர்காலம், கடந்த காலங்களை பற்றி சிந்திப்பது அதிகமாக இருக்கும். இதுவே அவர்களுக்கு மிகப்பெரிய தொல்லையாக அமையும்.

கல்வி மற்றும் வேலை : : வணிகம், மருத்துவம், குழந்தை மருத்துவர் மற்றும் இருதய நோய் நிபுணர், இலக்கியம், பத்திரிகை, அரசியல், அறிவியியல், ஜோதிடம் போன்ற துறைகளில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். இது தவிர உலோகம் மற்றும் கல் தொடர்பாக தொழில்களிலும் அவர்கள் வெற்றி பெற முடியும்.

காதல் வாழ்க்கை : : சிம்ம ராசிக்காரர்கள் காதல் ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கும். பல சிரமங்களை தாண்டி பின் அவர்கள் இந்த உணர்ச்சியை அனுபவிப்பார்கள். உணவு, ஒழுக்கமான ஆடை மற்றும் சிறந்த நடத்தையால் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

திருமணம் மற்றும் பொதுவாழ்க்கை : : சிம்ம ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது சிரமங்களை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் திருமணத்திற்கு பின் அவர்களின் அதிர்ஷடம் பிரகாசிக்கும். அம்மா உடன் சிம்ம ராசிக்காரர்கள் நெருக்கமாக இருப்பார்கள்.

நண்பர்கள் : : மேஷம், கடகம், மிதுனம், விருச்சிகம், தனுசு, கன்னி மற்றும் மீனம் போன்ற ராசிக்கார்களுடன் நட்பாக பழகுவார்கள். அதே நேரத்தில் துலாம், மகரம் மற்றும் கும்ப ராசிக்கார்களுடன் மோதல் போக்கை ஏற்படுத்தலாம்.

அதிர்ஷ்ட எண் : : 1 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : : சிவப்பு மற்றும் தங்க நிறம்

அதிர்ஷ்ட நாள் : : ஞாயிறு

அதிர்ஷ்ட ரத்தினம் : : மாணிக்கம்

மேலும் படிக்க