மிதுனம் 22 மே - 21 ஜூன்

Share: Facebook Twitter Linkedin
மிதுன ராசி - குணநலன், நடத்தை மற்றும் ஆளுமை

மிதுன ராசியின் ராசி அதிபதி புதன். அவர்கள் புத்திசாலிகளாகவும், இயற்கையிலேயே கலகலப்பானவர்களாகவும் இருப்பார்கள். எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ள இவர்கள், தங்களின் செயல்களுக்கு பாராட்டுகளைப் பெறுவார்கள். கூட்டத்தில் தனித்து நிற்பதே இவர்களின் தனிச்சிறப்பு..

உடலமைப்பு: : மிதுன ராசியின் குறியீடு ‘இரட்டையர்கள்’. இவர்கள் கவர்ச்சியாகவும் நட்பாகவும் இருப்பார்கள். தங்கள் புத்திசாலித்தனத்திற்காக அதிக பாராட்டுகளைப் பெறும் மிதுன ராசிக்காரர்கள் பெரும்பாலும் சொற்பொழிவாளர்களாக இருப்பார்கள்.

உடலமைப்பு: : இவர்கள் பொதுவாக சராசரி உயரத்தை விட சற்று உயரமாக இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் கூர்மையான கண்கள், அடர்த்தி குறைவான கூந்தல், மெல்லிய மூக்கு, நீண்ட கைகள் மற்றும் கூர்மையான கன்னம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார்கள். அச்சமின்றி எதையும் நேரடியாக பேசுவதில் கில்லாடிகள்..

குணநலன்கள்: : மிதுன ராசிக்காரர்கள் பொறுமையற்ற தன்மையைக் கொண்டவர்கள். அவர்களின் ஆளுமை மற்றும் தன்மை பலரின் இதயங்களை கவர்ந்திழுக்கும். இவர்களுக்கு அரசியல் துறையில் நல்ல பிடிப்பு இருக்கும். ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். தொண்டு, நன்கொடைகளில் அதிக அக்கறை காட்டுவார்கள், எதைச் செய்தாலும் கவனத்துடன் செய்வார்கள்.

பொழுதுபோக்குகள் / விருப்பங்கள்: : பயணம், எம்பிராய்டரி, தையல், புத்தகங்களைப் படித்தல், திரைப்படங்களைப் பார்ப்பது போன்றவற்றில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். பிறரின் கவனத்தை தங்களை நோக்கித் திருப்பச் செய்வதில் தனிச்சிறப்பு பெற்றவர்கள். இருப்பினும், அப்படி ஏதாவது நடந்தவுடன், மற்றவர் மீதான ஆர்வத்தை இழந்து விடுவார்கள்..

குறைகள்: : மிதுன ராசிக்காரர்கள் தைரியமானவர்கள் அல்ல. தவிர, நன்மை தீமைகளை கணக்கிடாமல் பல விஷயங்களை செய்வார்கள். குழப்பம் ஏற்பட்டவுடன், செய்யும் வேலைகளை சரியாக முடிக்காமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்..

கல்வி மற்றும் தொழில்: : வேறுபட்ட விஷயங்களை மிதுன ராசிக்காரர்கள் எளிதாக புரிந்துக் கொள்வார்கள். அறிவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். சுய தொழிலில் அவ்வளவாக வெற்றி பெற மாட்டார்கள். அதனால் நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காதல் வாழ்க்கை: : கலை, இசை மற்றும் பிற கலாச்சார விஷயங்களுடன் தொடர்புடையவர்களால் மிதுன ராசிக்காரர்கள் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். இருப்பினும் இயற்கையிலேயே அவர்கள் கவனக்குறைவாக இருப்பதால் காதலில் தோல்வி அடைகிறார்கள்.

திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை: : மிதுன ராசிக்காரர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல் இருக்கும், இதன் காரணமாக அது தோல்வியில் முடியும். உறவினர்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள், ஆனால் அதற்காக வருந்தவும் செய்வார்கள்..

நண்பர்கள் மற்றும் உறவினர்கள்: : ரிஷபம், கன்னி, சிம்மம் மற்றும் துலாம் ஆகிய ராசிக்காரர்களுடன் மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் நட்பாக இருப்பார்கள். இருப்பினும், கடக ராசிக்காரர்களிடம் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட எண்: : 5

அதிர்ஷ்ட நிறம்: : மஞ்சள் மற்றும் காவி

அதிர்ஷ்ட நாள்: : புதன் கிழமை

அதிர்ஷ்ட கல்: : மரகத கல்

ராசிபலன்-மிதுனம்

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் உற்சாகமான நாளாக இருக்கும்.உங்கள் நண்பர்கள் மற்றும் பிரியமானவர்களுடன் இன்பமான நேரத்தை செலவழிப்பீர்கள். இன்றுஉங்கள் குடும்பத்தினரின் உதவி தேவைபட்டால்

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:36

இன்றைய திதி:சுக்லபட்ச துவாதசி

இன்றைய நட்சத்திரம்:சதயம்

இன்றைய கரணன்: பவம்

இன்றைய பக்ஷம்:சுப்பிரம்

இன்றைய யோகம்:விருதி

இன்றைய நாள்:ஞாயிறு

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:16:45 to 18:12

எமகண்டம்:12:24 to 13:51

குளிகை காலம்:15:18 to 16:45