மகரம் 23 டிசம்பர் - 20 ஜனவரி

Share: Facebook Twitter Linkedin
மகர ராசி - குணநலன், நடத்தை மற்றும் ஆளுமை

மகர ராசி சனி கிரகத்தால் ஆளப்படுகிறது. சனியின் கீழ் வருவதால், மகர ராசியில் பிறந்தவர்கள் அனைவரும், மிகவும் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தவொரு வேலையை செய்ய முயற்சித்தாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தபின் தான் ஓய்வெடுப்பார்கள்.

குறியீடு: : கொம்பு வைத்த ஆடு மகர ராசியைக் குறிக்கிறது. இந்து புராணங்களின், இது ஒரு கடல் வாழ் உயிரினமாக கருதப்படுகிறது.

உடலமைப்பு: : மகர ராசி ராசிக்காரர்கள் ஒல்லியாகவும், எடை குறைவாகவும் இருப்பார்கள். அவர்களின் உயரம் சராசரியாக இருக்கும்.

குணநலன்கள்: : மகர ராசிக்காரர்கள் சுயநலமாக இருப்பார்கள். இயற்கையிலேயே பிடிவாத குணம் அவர்களிடம் இருக்கும். இது தவிர, மகர ராசிக்காரர்கள் லட்சியம் கொண்டவர்களாகவும், தீவிரமானவர்களாகவும் தங்கள் தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

பொழுதுபோக்குகள் / விருப்பங்கள்: : மகர ராசிக்காரர்களின் நினைவாற்றல் சக்தி ஆழமானது. பொருளாதார விஷயங்களைப் பொறுத்தவரை, அவர்கள் கண்களையும் காதுகளையும் திறந்து மிகுந்த கவனமுடன் இருப்பார்கள். தங்கள் கடமையையும், பொறுப்புகளையும் நன்கு புரிந்துகொண்டு, வேலைகளை நேர்மையுடன் செய்வார்கள்..

குறைகள்: : எளிதில் எரிச்சலடைவார்கள். அவர்களின் நடந்துக் கொள்ளும் விதத்தில் ஓரளவு ஆணவம் காணப்படும். வேலைகளை அவசரமாக மேற்கொள்வதையும் அவர்களின் குறைகளில் ஒன்றாக பட்டியலிடப்படலாம்.

கல்வி மற்றும் தொழில்: : மகரராசியினர் கல்வியில் மிகுந்த விருப்பம் கொண்டிருப்பர். அதனால் தான் அவர்கள் நன்கு படித்திருப்பார்கள். தொழிலைப் பற்றி பேசினால், அவர்கள் காப்பீடு, மின்சாரம், துறை ஆணையம், இயந்திரங்கள், ஒப்பந்தம், பந்தயம் போன்ற துறைகளில் மிகச் சிறப்பாக செயல்பட முடியும்.

காதல் வாழ்க்கை: : இவர்கள் காதலில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தங்கள் பார்ட்னரிடம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். அதே நேரத்தில், சில மகரராசிக்காரர்கள் தனிமையிலும் இருப்பார்கள்.

திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை: : இவர்கலின் தனிப்பட்ட வாழ்க்கை சிரமங்களும், சவால்களும் நிறைந்ததாகவே இருக்கும். அதே சமயம், அவர்களின் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசினால், அது மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள்: : ரிஷபம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுடன் மகர ராசிக்காரர்கள் நல்ல நட்பை கொண்டிருப்பார்கள். சிம்மம், கடகம், விருச்சிக ராசிக்காரர்களுடன் பெரும்பாலும் மகரராசிக்காரர்கள் ஒத்துப்போக மாட்டார்கள்.

அதிர்ஷ்ட எண்: : 8

அதிர்ஷ்ட நிறம்: : கருப்பு

அதிர்ஷ்ட நாள்: : சனிக்கிழமை

அதிர்ஷ்ட கல்: : நீல மாணிக்கம்

ராசிபலன்-மகரம்

இன்றைய நாள் உங்களுக்கு நன்றாக இருக்காது. இன்று இருமல்,காய்ச்சல் மற்றும் மன உலைச்சல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உதவுவது உங்களுக்கு பெரும் துயரத்தை தரலாம். யாரிடமும் பொ

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:15

இன்றைய திதி:கிருஷ்ணபட்ச சதுர்த்தி

இன்றைய நட்சத்திரம்:உத்திரட்டாதி

இன்றைய கரணன்: பவம்

இன்றைய பக்ஷம்:அமாவாசை/பௌர்ணமி

இன்றைய யோகம்:திருதி

இன்றைய நாள்:திங்கள்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:07:52 to 09:29

எமகண்டம்:11:06 to 12:43

குளிகை காலம்:14:20 to 15:58