கும்பம் 21 ஜனவரி - 19 பிப்ரவரி

Share: Facebook Twitter Linkedin
கும்பம் ராசி - இந்த ராசிக்காரர்களின் பண்புகள்

நடத்தை மற்றும் ஆளுமை ஆகியவை சனி கிரகத்தால் ஆளப்படுகிறது. அவை சனியின் நிர்வாகத்தின் கீழ் வருவதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை முறை, சிந்தனை செயல்முறை மற்றும் நடத்தைகளில் சுதந்திரமாக செயல்படுவார்கள். கும்ப ராசியை சேர்ந்தவர்கள் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் சிறந்த கண்டுபிடிப்புகளைச் செய்து கொண்டே இருப்பார்கள்.

கும்பத்தின் ராசி அடையாளம் : : கும்ப ராசி அடையாளம் குதிரையாகும். இவர்கள் சமுதாயத்திற்கும், உறவினர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நகைச்சுவை குணம் அதிகம் இருக்கும். ஆனால் இவர்கள் எந்தவிதமான சமூக மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பையும் விரும்புவதில்லை. மற்றவர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வாழவே விரும்புவார்கள்.

கும்ப ராசிக்காரர்களின் உடல் அமைப்பு : : கும்ப ராசிக்காரர்கள் நல்ல நேர்த்தியான உயரத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் முகம் சற்று பெரியதாக இருக்கும். அவர்களின் கழுத்து, முதுகு, வயிறு, இடுப்பு, தொடை மற்றும் கால்கள் நீளமாக இருக்கும்.

கும்ப ராசிக்காரர்களின் ஆளுமை: : கும்ப ராசிக்காரர்களில் பெரும்பாலோர் உள்முக சிந்தனையாளர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரிடமும் சட்டென பேச மாட்டார்கள். பலர் முன் பேசுவதற்கே பதட்டப்படுவார்கள். கூச்ச சுபாவம் அதிகம் இருக்கும். இருப்பினும், அவர்கள் மனதளவில் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருப்பார்கள்.

கும்ப ராசிக்காரர்களின் பொழுதுபோக்குகள் / விருப்பங்கள் : : வழக்கமாக கும்ப ராசிக்காரர்கள் பயணம் செய்யவதை அதிகம் விரும்புவார்கள். புகைப்படம் எடுப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள், கதைகள் படிக்க அதிக ஆர்வம் காட்டுவார்கள், பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட கற்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். எலக்ட்ரானிக் கேஜெட்டுகளை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவார்கள்.

கும்ப ராசிக்காரர்களின் குறைபாடுகள் : : கும்ப ராசிக்காரர்கள் உறவில் ஒருபோதும் ஒருவரிடம் மட்டும் தங்கள் அர்ப்பணிப்பை முழுமையாக செலுத்த விரும்ப மாட்டார்கள். விரைவில் அவர்களுக்கு அந்த உறவில் சலிப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய துணையை தேடுவார்கள்.

கும்ப ராசிக்காரர்களின் கல்வி மற்றும் வணிகம் : : இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலித்தனமானவர்களாக இருப்பார்கள். அதனால்தான் அவர்கள் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறைகளில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். இது தவிர, ஜோதிடம், எஸோடெரிக் சயின்ஸ், கிராமிய மருத்துவம், தத்துவம், மருத்துவம், கணினி போன்ற துறைகளில் வெற்றியடைவார்கள். அதில்தான் அவர்களின் விருப்பமும் இருக்கும்.

கும்ப ராசியின் காதல் உறவுகள் : : காதல் என்று வரும்போது, கும்ப ராசிக்காரர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அதில்தான் அவர்கள் உற்சாகம் காண்கிறார்கள்.ஒருவர் இவருக்கு அன்பைக் கொடுக்கும் போது இவர்களும் அந்த அன்பை முழுமையாக கொடுக்க முணைகின்றனர். வாழ்க்கைத் துணை எப்போதும் தன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கும்ப ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை : : கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணை தங்களின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று ரகசியமாக விரும்புகிறார்கள். மேலும், அவர்களின் எண்ணம் போல் துணை சரியான பாதையில் நடந்து கொண்டால், கும்ப ராசிக்காரர்களின் சிறந்த துணையாக இருப்பார்கள்.

கும்ப ராசிக்காரர்களின் நண்பர்கள்: : கும்ப ராசிக்காரர்களின் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு உறவில் இருப்பார்கள். அதே நேரத்தில், மேஷம், கடகம், சிம்மம் மற்றும் விருச்சகம் ஆகிய ராசிக்காரர்களுடன் எப்போதும் மோதலாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: : 8

அதிர்ஷ்ட நிறம்: : ஊதா, கருப்பு மற்றும் நீலம்

அதிர்ஷ்ட நாள்: : சனிக்கிழமை

அதிர்ஷ்ட ரத்தினக்கல் : : நீலம்

மேலும் படிக்க