முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Akshaya Tritiya 2023 | அட்சய திருதியை 2023 தேதி மற்றும்‌ நேரம்‌ குறித்த தகவல்கள்...

Akshaya Tritiya 2023 | அட்சய திருதியை 2023 தேதி மற்றும்‌ நேரம்‌ குறித்த தகவல்கள்...

தங்கம்

தங்கம்

Akshaya Tritiya 2023 | அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது நம் வாழக்கையில் செழிப்பையும், செல்வத்தையும் தரும் என்பது ஐதீகம். இந்த வருடம் அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க சிறந்த நேரம் எது? என்பதை இங்கு இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

அட்சய திருதியை என்றால்‌ வளர்க என்று பொருள்‌. அட்சய திருதியை நாளில்‌ செய்யும்‌ செயல்‌ மேன்மேலும்‌ வளரும்‌ என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில்‌ நாம்‌ வாங்கும்‌ பொருட்கள்‌ மேன்மேலும்‌ வளரும்‌. அன்றைய தினம்‌ கல்‌ உப்பு. மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ கிடைக்கும்‌. நம்முடைய வீட்டில்‌ செல்வம்‌ பெருகும்‌. 

சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் மூன்றாவதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி. 3-ஆம்‌ எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில்‌ தங்கத்தை பிரதிபலிக்கிறார்‌. எனவே குருவுக்கு பொன்னன்‌ என்ற பெயரும்‌ உண்டு. இதனால்‌ தான்‌ அட்சய திருதியை நாளில்‌ பொன்‌ வாங்குவது சிறப்பாகிறது.

மேலும் அட்சய திரிதியை நாள் பல ஆன்மிக சிறப்புக்களைக் கொண்ட நாளாகும். இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கி, இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாக வழங்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் எல்லோருக்கும் அதற்கு வசதி கிடையாது. அதனால் இந்த நாளில் அரிசி, கோதுமை, பானகம், நீர்மோர், அன்னம் (சாதம்) தானம் செய்யலாம். எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு தயிர் சாதம் கூட தானம் செய்யலாம். இதனால் நம் செல்வ வளம் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

தானம் செய்வது நல்லது

அட்சய திரிதியை என்பது தானம் செய்வதற்கான நாளாகும். ஆனால் இன்று தங்கம் வாங்கி சேர்ப்பதற்கான நாளாக மாறி விட்டது. அட்சய திரிதியை நாளில் மங்கல பொருட்களை வாங்கி யாருக்காவது தானம் கொடுத்தால் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தங்கம்

அட்சய திருதியை 2023 தேதி, நேரம்

1. அட்சய திரிதியை 2023 ம் ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆனால் ஏப்ரல் 22 ம் தேதி சனிக்கிழமை காலை 09.18 மணிக்கே திரிதியை திதி துவங்கி விடுகிறது.

2. ஏப்ரல் 23 ம் தேதி காலை 09.27 வரை மட்டுமே திரிதியை திதி உள்ளது. ஏப்ரல் 23 ம் தேதியே சூரிய உதய காலத்தில் திரிதியை திதி உள்ளதால் அன்றைய தினமே அட்சய திரிதியை நாளாக கணிக்கப்பட்டுள்ளது.

top videos

    3. தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாக ஏப்ரல் 22 ம் தேதி காலை 07.49 முதல் ஏப்ரல் 23 ம் தேதி காலை 07.47 வரை என கணித்துள்ளனர்.

    First published:

    Tags: Akshay tritiya, Gold