முகப்பு /ஆன்மிகம் /

உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் - சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா

உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் - சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா

X
சுந்தர

சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 28ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவம் நிகழ்வில் சந்திரபிரபை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடக்கும். அந்த வகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 28ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதன்படி சித்திரை பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாள் மாலையில் நடைபெற்ற உற்சவத்தை முன்னிட்டு சுந்தர வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெள்ளை பட்டு உடுத்தி திருவாபரணங்கள் மல்லிகைப்பூ, செண்பகப்பூ மலர் மாலைகள் அணிவித்து வெண்மை நிற சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் மேளதாளங்கள் முழங்க, பாதம் தங்கிகள் தூக்கிவர உத்திரமேரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து வைகுண்ட பெருமாள் கோவிலில் மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து சேவை சாதித்தார்.

top videos

    வெண்மை நிற சந்திர பிரபை வாகனத்தில் வீதி உலா வந்த சுந்தர வரதராஜ பெருமாளை உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, தீர்த்தம், சடாரி, பிரசாதங்களை பெற்று சென்றனர்.

    First published:

    Tags: Kancheepuram, Local News