யுகாதி திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கான புது வருடப் பிறப்பாகும். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கோலாகலமாக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் கடவுளை வழிபட்டு இந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
இந்த நாளில்தான் பிரம்மா உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குமான தலை எழுத்தை எழுதியதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் இந்நாளிலிருந்து அவர்களின் வாழ்க்கைத் தொடங்குவது போல் வருடத்தின் முதல் நாளாக கொண்டாடுகின்றனர். இந்த யுகாயானது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் நிலையை வைத்து கணக்கிட்டு கொண்டாடப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை
யுகாதி திருநாள் ஆங்கில மாதம் ஏப்ரல் முதல் வாரம் அல்லது மார்ச் கடைசி வாரம் வசந்த காலத்தில் வருகிறது. பூரண பிரதமை திதி தினமே யுகாதி திருநாள் ஆகும். யுகாதியன்று மக்கள் அனைவரும் சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புது உடை உடுத்தி வீட்டை பண்டிகைக்கு ஏற்ப அலங்கரிக்கின்றனர். யுகாதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பழைய பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டிற்கு வெள்ளை அடித்து வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.
யுகாதி பச்சடி
யுகாதி பச்சடி என்பது அறுசுவையும் கலந்த ஒரு பச்சடி ஆகும். இதில் வெல்லம் , வேப்ப இலை , வேப்பிலைக் காய், வேப்பம் பூ , புளிச் சாறு அல்லது புளி , மாங்காய் போன்றவை கலந்திருக்கும். இந்த பச்சடியை யுகாதி பண்டிகையின் சிறப்பு உணவாக கடவுளுக்கு படையலிடுகின்றனர். இது இன்பம் மற்றும் துன்பம் என அனைத்தும் கலந்த கலவையாக வாழ்க்கை இருக்கும் என்பதையே குறிக்கிறது. மேலும் பூர்ண போளி என்கின்ற இனிப்பு பண்டமும் சமைத்து படையலிடுவது வழக்கம்.
இந்நாளில் கர்நாடகா, ஆந்திரா , தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அரசு பொது விடுமுறை விடுவது வழக்கம். இதேபோல் மஹாராஷ்டிராவிலும் குடிபடவா என்கிற பெயரில் புது வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுகாதி 2023 நேரம், தேதி, திதி குறித்த தகவல்கள்
சூரிய உதயம் | மார்ச் 22, 2023 6:33 AM |
சூரிய அஸ்தமனம் | March 22, 2023 6:34 PM |
திதி ஆரம்பம் நேரம் | March 21, 2023 10:53 PM |
திதி முடிவு நேரம் | March 22, 2023 8:21 PM |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: New Year 2023, Telugu