'தென் கைலாயம்' என்று போற்றப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த திருத்தலம், திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு பிரசித்தி பெற்றது.
நடப்பாண்டு சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்வுகளான செட்டிப் பெண்ணாக இறைவன் உருவெடுத்து பிரசவம் பார்த்து, தாயுமானவராக மாறிய வைபவம் கடந்த, 29ம் தேதி நடந்தது. திருக்கல்யாண உற்சவம், சுவாமி, அம்மன் திருவீதி உலா கடந்த, 30ம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலை, 4 மணியளவில் உற்சவ மூர்த்திகள் மலையிலிருந்து புறப்பட்டு, கீழ ஆண்டார் வீதியில் உள்ள தேர் மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கிருந்த தேர்களில் மூர்த்திகள் எழுந்தருளிய பின்னர், 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில்தேர் வடம் பிடிக்கப்பட்டது.
Also see... சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா... நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி சிவகாமி அம்பாள் வீதி உலா..!
"சம்போ மகாதேவா.. ஓம் நமசிவாய.." என்ற கோஷங்கள் முழங்க, கைலாய வாத்தியங்கள், மங்கல வாத்தியங்கள், தாரை, தப்பட்டைகள் அதிர, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அதைத்தொடர்ந்து அம்மன் தேர் வடம் பிடிக்கப்பட்டது. மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தேரோடும் வீதிகள் அனைத்தும், திருச்சி மாவட்டத்தின் பிரதான கடைவீதி பகுதியில் என்பதால், தேரோடும் நேரத்தில், அப்பகுதி போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதிதா லெட்சுமி தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, Trichy