பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வதோச பரிகாரத்தலமாகவும் சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கக்கூடிய திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது. இந்த தேரோட்டத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் வெளி நாடுகளில் இருந்து வந்து இங்கு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் தினந்தோரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் இன்று கோவிலின் நடை திறந்தது முதல் ஏராளமான வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பேருந்துகள் டூரிஸ்ட் வேன்கள் போன்றவற்றில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, பெங்களூர் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இன்று இங்கு வருகை தந்துள்ளனர்.
பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய இந்த திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலை காண்பதற்காகவும் தரிசனம் செய்வதற்காகவும் காசியில் இறந்தால் முக்தி திருவாரூரில் பிறந்தால் முக்தி என்கிற சொற்றொடருக்கு ஏற்றார் போல் இந்த தலத்தில் ஒரு முறையாவது சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் இங்கு ஏராளமானோர் வருவது வழக்கம்.
Also see... திருப்பதி திருமலை பக்தர்களுக்கு நற்செய்தி.. கூட்டமில்லாத மிக எளிதான தரிசனம்.!
அந்த வகையில் கோடை விடுமுறை என்பதால் ஏராளமான வெளி மாவட்ட மாநில பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இதுபோன்று கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, குளியலறை போன்றவை ஆலயத்திற்கு அருகில் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thiruvarur