திருப்பதி மலையில் இருந்து பக்தர்கள் சென்று கொண்டிருந்த மின்சார பேருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வளைவு ஒன்றில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஆறு பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் உட்பட அனைத்து பயணிகளையும் திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தேவஸ்தான நிர்வாகம் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து ஊருக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி விபத்து நடைபெற்ற பகுதியில் தேவஸ்தான அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். மின்சார பேருந்துகளை தயார் செய்து அரசு போக்குவரத்து கழகத்திற்கு விற்பனை செய்த ஒலக்ட்ரா பேருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் ஆகியவை விபத்தில் சிக்கி கவிழ்ந்த பேருந்தில் தொழில்நுட்ப கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். இந்த விபத்திற்கு மித மிஞ்சிய வேகம்தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க... திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்... தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
எதிர்வரும் காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடக்காத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு மலைப்பாதையில் பேருந்துகளை இயக்க உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்பதை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus accident, Tirumala Tirupati, Tirupati, Tirupati temple