முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி: 2023- 24 நிதியாண்டில் தேவஸ்தானம் போட்ட பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?

திருப்பதி: 2023- 24 நிதியாண்டில் தேவஸ்தானம் போட்ட பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா?

திருப்பதி திருமலை

திருப்பதி திருமலை

tirupati Budget 2023-24 | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதியில் 2022-23ஆம் நிதி ஆண்டில் தேவஸ்தானத்தின் ஒட்டுமொத்த வருமானம் 4,385 கோடியே 25 லட்ச ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் 2023- 24 நிதி ஆண்டில் தேவஸ்தானத்தின் வருமானம் 4,411 கோடியே 65 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று தேவஸ்தானத்தின் பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.

2023-24 நிதி ஆண்டில் முக்கியமாக உண்டியல் காணிக்கையாக 1591 கோடி ரூபாயும், பல்வேறு வங்கிகளில் தேவஸ்தான வைப்பு நிதிக்கு கிடைக்கும் வட்டி வருமானமாக 990 கோடி ரூபாயையும் வருமானம் கிடைக்கும். பிரசாத விற்பனை மூலம் 500 கோடி ரூபாயும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் 330 கோடி ரூபாயும் , கட்டண சேவை டிக்கெட் விற்பனை மூலம் 140 கோடி ரூபாயும், அறைகள் மற்றும் கல்யாண மண்டபங்களின் வாடகை வருவாய் மூலம் 129 கோடி ரூபாயும் தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Also see... திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் செய்யப்படும் நைவேத்தியத்தின் ரகசியம் தெரியுமா?

top videos

    2023-24 நிதியாண்டில் செலவு வகைகளை பார்க்கும்போது ஊழியர்களுக்கான ஊதியமாக 1,532 கோடி ரூபாயும், பொருட்களை கொள்முதல் செய்யும் வகையில் 690 கோடி ரூபாயும், முதலீட்டு செலவுகள் செய்யும் வகையில் 600 கோடி ரூபாயும், அபிவிருத்தி பணிகளுக்காக 300 கோடி ரூபாயும் முக்கிய செலவினங்களாக இருக்கும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Budget Session, Tirumala Tirupati, Tirupati