முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு... டிக்கெட்டுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு...!

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு... டிக்கெட்டுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு...!

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ஆகிய ஆர்ஜித சேவைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தொடங்குகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தேமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு இன்று மே18ஆம் தேதி காலை 10 மணி முதல் மே 20 ஆம் தேதி வரை தேவாஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... திருப்பதி தரிசன டிக்கெட் கிடைக்கவில்லையா..? இப்படி பண்ணுங்க.. ஏழுமலையானை ஈஸியாக தரிசிக்கலாம்..!

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான அங்கபிரதட்சண டிக்கெட்டுகளின் கோட்டா வரும் மே 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதை பக்தர்கள் இலவசமாக தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து, அங்கபிரதட்சண சேவையில் பங்கு கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

top videos
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati, Tirupati temple