திருப்பதி என்றதும் லட்டும் ஏழுமலையானின் பிரசாதமும்தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
கொரோனா காலத்திற்கு பிறகு திருப்பதிக்கு சென்றுவர சில கட்டுபாடுகளும் விதிமுறைகளும் உள்ளன. புதிதாக திருமணம் ஆனவர்கள் திருப்பதிக்கு சென்று வழிபட்டு வர வேண்டும் என்று நினைப்பார்கள்.. சிலர் திருமணத்தையே திருப்பதியில் நடத்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் சில சூழ்நிலை காரணமாக சென்று வர முடியாமல் இருப்பவர்கள் என அவர்களுக்காகவே டி.டி.டி எனும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. இது குறித்து தெரியாதவர்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
டி.டி.டி எனும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டம்
புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு திருப்பதி ஏழுமலையானின் திருமண ஆசீர்வாதம் பரிசு பொருள் வழங்கும் விதமாக டி.டி.டி எனும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த திட்டத்தின்படி, உங்கள் வீட்டில் யாருக்கேனும் திருமணம் நிச்சயம் நடந்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தால், அந்த திருமணத்திற்கான திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த முகவரியில், திருமண பத்திரிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
To,
Sri Lord Venkateswara swamy,
The Executive Officer
TTD Administrative Building
K.T.Road
Tirupati - 517501. திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
அப்படி அனுப்பப்படும் திருமண தம்பதிகளுக்கு திருப்பதி பாலாஜியின் பிரசாதம் மற்றும் பிற மங்கள பொருட்களை, தம்பதிகளுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆசீர்வாதத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுப்பி வைக்கும். தம்பதிகளுக்கு அனுப்பப்படும் பிரசாதத்தில் என்னென்ன இருக்கும் தெரியுமா?
புதுமண தம்பதிகளுக்கு கோவிலில் இருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். தம்பதிகள் கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களை அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் திருமண முக்கியத்துவத்தைச் சொல்லும் ஏழுமலையானின் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் நம்முடைய திருமண பத்திரிக்கையை எம்பெருமானுக்கு சமர்ப்பித்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் கிடைப்பதோடு, திருப்பதி கோயிலின் பிரசாதத்தைப் பெற்று மகிழலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupati