முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி : ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் வருடாந்திர வசந்தோற்சவம்..

திருப்பதி : ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் வருடாந்திர வசந்தோற்சவம்..

ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் வருடாந்திர வசந்தோற்சவம்..

ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் வருடாந்திர வசந்தோற்சவம்..

tirupati | வசந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று துவங்கி நாளை வரை கல்யாண உற்சவத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Tirupati, India

திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உட்பட ஏராளமான கோவில்களை நிர்வகித்து வருகிறது. அவற்றில் ஒன்று திருப்பதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சீனிவாச மங்காபுரத்தில் அமைந்துள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படும் அந்த கோவில் தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால் நிர்வாக அளவில் இந்த கோவில் முழுக்க முழுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரும் பக்தர்களில் பலர் சீனிவாச மங்காபுரம் சென்று கல்யாண வெங்கடேஸ்வரரை தரிசித்து செல்வது வழக்கம். வருடாந்திர பிரம்மோற்சவம் உட்பட ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மலையில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலிலும் நடைபெறும்.

மேலும் படிக்க... திருப்பதி ஏழுமலையானுக்கு ஜம்முவில் கோவில்... ஜூன் 8ல் கும்பாபிஷேகம்

அந்த வகையில் தற்போது நேற்று துவங்கி கல்யாண வெங்கடேச சுவாமி கோவிலில் வருடாந்திர வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று உற்சவர்களுக்கு அபிஷேகம் நடத்தப்படும்.

அத்துடன் இன்று மாலை தங்கரத ஊர்வலம் நடைபெற உள்ளது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று துவங்கி நாளை வரை கல்யாண உற்சவத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

top videos

    செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati