திருமலை திருப்பதி தேவஸ்தானம் www. tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இது தவிர திருப்பதி திருமலை ஆகிய ஊர்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக இருக்கும் தங்கும் அறைகளை முன் பதிவு செய்வது, திருமணம் செய்ய தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருமண மண்டபங்களை முன்பதிவு செய்வது, திருப்பதி மலையில் இலவசமாக தரிசனம் செய்து கொள்வது, ஏழுமலையானுக்கு ஈ உண்டியலில் காணிக்கை செலுத்துவது, தேவஸ்தானம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது ஆகியவற்றிற்கும் இந்த இணையதளத்தை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேவஸ்தானத்தின் இணையதளம் போல் தோற்றமளிக்க கூடிய பல்வேறு இணையதளங்களை துவக்கிய தனிநபர்கள் அவற்றின் மூலம் பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். இது பற்றி ஏராளமான புகார்கள் தேவஸ்தானத்திற்கு வந்தன. இதற்கு முன்னரும் இதே போன்ற புகார்கள் வந்ததால் தேவஸ்தானம் தன்னுடைய இணையதள முகவரியை மாற்றி அமைத்தது.
ஆனாலும் மோசடி பேர்வழிகள் பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தேவஸ்தானத்தின் இணையதளம் போல் தோற்றம் அளிக்கும் வகையில் இணையதளங்களை துவக்கி அவற்றின் மூலம் பக்தர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவஸ்தான தகவல் தொழில்நுட்பத் துறை பொது மேலாளர் சந்திப் திருமலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Also see... திருப்பதி போறீங்களா...? மே மாத தரிசன டிக்கெட் குறித்து தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
அவர் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirupati