முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூன் மாத கட்டண சேவை டிக்கெட்டுகள்.. ஆன்லைன் முன்பதிவு விவரம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூன் மாத கட்டண சேவை டிக்கெட்டுகள்.. ஆன்லைன் முன்பதிவு விவரம்..!

திருப்பதி

திருப்பதி

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் வரும் ஜூன் மாதம் கட்டண சேவையில் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 23ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

  • Last Updated :
  • Tirupati, India

ஏழுமலையான் கோவில் ஜூன் மாத கட்டண சேவை டிக்கெட்டுகள் மார்ச் 23 தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி மட்டுமே  முன்பதிவு செய்திக்கொள்ள இயலும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் வரும் ஜூன் மாதம் கட்டண சேவையில் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 23ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையானை சுப்ரபாதம், கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற கட்டண சேவைகளில் பக்தர்கள் தினமும் தரிசித்து வருகின்றனர். அவற்றுக்கான டிக்கெட்டுகள் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளன.

Read More : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று ஆழ்வார் திருமஞ்சனம்..!

அதேபோல் ஜூன் மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்கப் பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும், குலுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் ஜூன் மாதத்துக்கான கட்டண சேவை டிக்கெட்டுகள் 24 தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் www. tirupathibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், கட்டண சேவை டிக்கெட்டுகள் ஆகியவற்றை முன் பதிவு செய்ய பக்தர்கள் ஆதார் அட்டையை மட்டுமே இனிமேல் பயன்படுத்த முடியும் என்று தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: Tirupathi, Tirupati Devotees, Tirupati temple