முகப்பு /ஆன்மிகம் /

வெகு விமர்சையாக நடைபெற்ற தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!

வெகு விமர்சையாக நடைபெற்ற தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!

X
மீனாட்சிசுந்தரேஸ்வரர்

மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

Theni | தேனியில் உள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாணம் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர்.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

வெகு விமர்சையாக நடைபெற்ற தேனி மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாணம் வைபவத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண நிகழ்வு :

சித்திரை மாதத்தில் ஆண்டுதோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலில் வரதராஜ பெருமாள் மீனாட்சி அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் புனித கலச நீர் அடங்கிய கும்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பச்சை நிற வண்ண பட்டு உடுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக மேளதாளம் முழங்க சிறப்பாக  நடைபெற்றது. பின்னர் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கூடி இருந்த பொதுமக்கள் மீது பூ பந்து வீசும் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பக்தர்கள் அரோகரா கோசத்துடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தம்பதியை வணங்கினர்.  இதன் வைபவத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் பழைய மாங்கல்ய கயிறை மாற்றி அம்மன் பிரசாத புதிய கயிறை தங்களது தாலி சரடில் கோர்த்துக் கொண்டனர்.

top videos

    இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்து சென்றனர்.

    First published:

    Tags: Local News, Theni