படிக கற்கள் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யுமா? - ஜோதிடம் கூறுவது என்ன?
Stones For Good Luck
வாஸ்து ஒவ்வொரு விஷயத்திற்கும் முக்கியம். அதே, போல தான் ராசி கற்களும். ஜோதிட ரீதியாக, ராசி கற்கள் அந்தந்த ராசிக்கு நல்ல பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம். அந்தவகையில், சில படிகங்களை நாம் உபயோகிப்பதால் அது மாதவிடாய் தொடர்பான வலியைக் குறைக்கும் என கூறப்படுகிறது. அந்த படிகங்கள் பற்றி காணலாம்.
மாதவிடாய் என்பது பருவமடைந்த பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் இயற்கையாக நடைபெறும் ஒரு உடலியல் நிகழ்வு. மாதவிடாயின் போது பெண்களுக்கு லேசானது முதல் கடுமையான வயிற்று வலியை அனுபவிப்பார்கள். வலியை அனுபவிப்பவர்கள் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வார்கள். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்றாலும், அவற்றை பற்றி நாம் யோசிப்பதில்லை. ஆனால், நாம் சில பதிகங்களை உபயோகிப்பதன் மூலம் மாதவிடாய் வலியை குறைக்கலாம் என கூறப்படுகிறது. அவற்றை பற்றி இங்கே விரிவாக காணலாம்.
மூன் ஸ்டோன் ( Moonstone ) : மூன் ஸ்டோன் இயல்பாகவே பெண்களுக்கான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. அது மட்டும் அல்ல, ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. மாதவிடாய், கருவுறுதல் மற்றும் கருப்பை நோய்க்குறி ஆகியவற்றுடன் தொடர்புடையது. எனவே, மூன் ஸ்டோனை பயன்படுத்துவதால், உங்களின் ஹார்மோன்களின் ஓட்டத்தை சீராக்கி வழியை குறைக்கிறது. இது பெண்களுக்கு பல்வேறு பலன்களையும் நன்மைகளையும் தருகிறது.
நீலமணி ( Sapphire ) : நீலமணி கற்கள் பார்ப்பதற்கு அழகாகனவை. இது, மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதுடன் உடலில் உள்ள அனைத்து வகையான வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றலின் சக்தியை கொண்டுள்ளது. மேலும், புஷ்பராகம் வயிற்று வலியை குறைப்பதுடன் பதற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நீங்கள் நிதானமாக உணரலாம். மாதவிடாய்க்கு முன் தோன்றும் சில உடல் உபாதைகளை தடுக்க இது ஒரு சிறந்த படிகமாகும்.
ரோஸ் குவார்ட்ஸ் ( Rose quartz ) : ரோஸ் குவார்ட்ஸ் குறிப்பாக வலி நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த படிகமானது இதயம் மற்றும் காற்றோட்ட அமைப்பின் சரியான செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. மேலும், இது தியானத்தை வளர்ப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க உதவுகிறது. இதனால், இது பெண்களின் பாலியல் பிரச்சனைகளை குறைத்து ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கைக்கு உதவுகிறது.
மரகத மாணிக்கம் ( Emerald ) : மரகத ரத்தினம் ஒரு நபரின் அறிவு, உணர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது புளோரைட் படிகம் அல்லது ரத்தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இது, மூளை அலைகளில் உள்ள அனைத்து வகையான தொந்தரவுகளையும் நீக்கி, மூளையின் இரசாயன சமநிலையை மீட்டெடுக்கிறது. இது வலியை அதிகரிக்கும் உணர்வை குறைக்கும். எனவே, இது மாதவிடாய் வலிக்கு உதவும் சிறந்த படிகங்களில் ஒன்றாகும்.
சிவப்பு பவளம் ( Precious coral ) : சிவப்பு பவளத்திற்கு (Red coral) அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அற்புதமான சக்தி உள்ளது. மேலும், இது திசுக்கள், உறுப்புகள் மற்றும் வளர்சிதை மாற்றத்தைத் தூண்ட உதவுகிறது. இதனால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலின் மற்ற பாகங்கள் மற்றும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதால், மாதவிடாய் வலி குறைகிறது.
top videos
லாப்ரடோரைட் ( Labradorite ) : லாப்ரடோரைட் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு சிறந்த படிகமாகும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில், இது கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் ஒரு நபரை குளிர் மற்றும் வெப்பத்திற்கு குறைவான உணர்திறன் கொண்டது மற்றும் மாதவிடாய் அறிகுறிகளுக்கு வலி நிவாரணியாக செயல்படுகிறது.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.