நமது முன் ஜென்ம வினைகளே தோஷங்கள் ஆகும். "முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும்" என்பார்களே!... அப்படி விளைந்து அறுவடை செய்யக் காத்திருக்கும் வினை பயிர்களே தோஷங்கள். "எதை விதைத்தாயோ... அதையே அறுவடை செய்வாய்!".... என்று பெரியோர்கள் சொன்னதும் இதைத் தான். இன்னும் விளங்கும் படியாகச் சொல்ல வேண்டும் எனில்... போன ஜென்மத்தில் சகோதர துரோகம் செய்து இருப்பான். அவனுக்கு இந்த ஜென்மத்தில் 3 அல்லது 11 ஆம் இடம் சரியில்லாமல் போகும். அதனால், இறுதியில் அவனது சகோதரனே இந்த ஜென்மத்தில் அவனுக்கு எதிரியாக இருப்பான்.
மனைவியை முன் ஜென்மத்தில் வதைத்து இருப்பான். அவனுக்கு ஏழாம் பாவமே சரியில்லாமல் இந்த ஜென்மத்தில் காணப்படும். இதனால் திருமணம் தாமதம் ஆகி... அதிக மன வருத்தத்தை அவனுக்குத் தரும். அப்படியே சிலருக்குத் திருமணம் நடந்தாலுமே... எந்தக் கோயிலுக்கு சென்று பரிகாரம் தேடினாலும்... வாழ்க்கை கசக்குமே தவற இனிக்காது.
தாயை மோசமாக முன் ஜென்மத்தில் நடத்தி இருப்பான். அவனுக்கு இந்த ஜென்மத்தில் 4 ஆம் பாவம் பாதிக்கப்பட்டு இருக்கும். இதனால், தாயின் அன்பே கிடைக்காமல் வருந்துவான். இப்படியாக நாம் செய்த கர்மாக்கள், வினைகள், பாவங்கள் தான் தோஷங்கள். அது இறைவன் தருவதல்ல... நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது.
பரிகாரம் இல்லா சில தோஷங்கள்
பொதுவாகவே, ஜாதகத்தில் காணப்படும் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. சில தோஷங்களுக்கு முழுமையான பரிகாரங்களை செய்ய இயலாது...
1. ராகு மட்டும் தனித்து சுப பார்வை இன்றி ஐந்தாம் இடத்தில் இருந்து. ஐந்தாம் அதிபதி ஆறு, எட்டு, 12 இல் மறைந்தால் அது கடுமையான புத்திர தோஷம். இதற்குப் பரிகாரம் செய்தாலுமே... அது முழுமையாக வெற்றி பெறும் என்று சொல்வதற்கு இல்லை.
2. ராகு/ கேதுக்கள் தரும் கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் முழுமையாக செய்ய முடியாது.
3. அதேபோல, ராகு - கேதுக்கள் தரும் ராகு/ கேது தோஷத்திற்குக் கூட முழுமையாகப் பரிகாரம் செய்ய இயலாது.
4. ஜோதிடத்தில் "அவயோக தோஷம்" என்பர். இந்த தோஷம் ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அவருக்கு நன்மையே நடக்காது. ஒருவர் முற்பிறவியில் பல பேர்களை ஏமாற்றியிருந்தால் இந்தப் பிறவியில் அவர் ஏமாறும் நபராகப் பிறந்திருப்பார். இதுவே அவ யோக தோஷம் எனப்படும்.
ஆனால், மேற்கண்ட தோஷம் தீர காசி - ராமேஸ்வரம் யாத்திரை சென்று ஈசனை வழிபட்டு வருதல் என்பது ஓரளவு தோஷ நிவர்த்தி தரும் என்பது நம்பிக்கை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.