முகப்பு /செய்தி /ஆன்மிகம் / குளித்தலையில் விமர்சையாக நடந்தது அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில் தெப்ப உற்சவம்!

குளித்தலையில் விமர்சையாக நடந்தது அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில் தெப்ப உற்சவம்!

தெப்ப உற்சவம்

தெப்ப உற்சவம்

குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. குளித்தலை பகுதியை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தெப்ப உற்சவத்தை கண்டுகளித்தனர்.

  • Last Updated :
  • Karur, India

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் 1067 அடி உயரத்தில் மலை உச்சியின் மீது புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளித்தலை தெப்பக்குள தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் பங்குனி மாதத்தில் தெப்ப உற்சவ விழா வருடம்தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இரவு தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி உற்சவரை சிவ பக்தர்கள் அய்யர்மலையில் இருந்து குளித்தலைக்கு தங்கள் தோளில் தூக்கியவாறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். தெப்ப குளத்தினை வந்தடைந்ததும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சுவாமி உற்சவர் அம்மாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Also see... பங்குனி உத்திரம் 2023 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...

அதைத் தொடர்ந்து தெப்பத்தினை மூன்று முறை வலம் வந்து தெப்பத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளிய சிவபெருமான் நம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டன. இந்த தெப்ப உற்சவத்தில் குளித்தலை பகுதியை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர் 

top videos
    First published:

    Tags: Karur