எச்சில் கூட முழுங்காமல் இஸ்லாமியர்கள் விரதம் இருப்பதன் நோக்கம் குறித்து திருநெல்வேலையைச் சேர்ந்த காதர் பாட்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். அதனைத் தொடர்ந்து, ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்புதொடங்குவதற் கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார்.
இந்நிலையில், மார்ச் 24 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார். இது தொடர்பாகஅவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,மார்ச் 22ஆம் தேதி ரமலான் மாதபிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை (மார்ச் 24ம் தேதி) அன்று ரமலான் மாதம் தொடங்கும் என தெரிவித்தார்.
இவ்வாறு, ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் அனைவரும்ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர். அதன்படி, திருநெல்வேலி டவுன் போத்தீஸ் கடை . அருகே சிறப்பு வாய்ந்த பள்ளிவாசலில் தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் எச்சில் கூட முழுங்காமல் விரதம் இருப்பதன் நோக்கம் கடவுளிடம் வேண்டுதல் குறித்து காதர் பாட்ஷா நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
நோன்பு இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. சூரிய உதயத்திற்கு முன்பு சாப்பிட்டுக் கொள்ளலாம், அதற்குப் பிறகு தண்ணீர் கூட அருந்தக் கூடாது. குறிப்பாக எச்சில் கூட முழுங்காமல் நோன்பு இருக்க வேண்டும். இது ஒரு தியாகமாகும்.மாலை 6:40 மணிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் நோன்பு திறக்கப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் கூட இந்த நோன்பு வைப்பதற்கு காரணமான அல்லாஹ்விற்கு நன்றி கூறுவோம்.
இந்த நோன்பு தனக்கு கிடைத்தது போல் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் நல்ல ஆரோக்கியமான அனைவருக்கும் கிடைக்க வேண்டும், என வேண்டுவோம் நோன்பு திறக்கும் நேரத்தில் அல்லாஹ்விடம் நாம் வேண்டும் பொழுது அவைகள் அப்படியே நிறைவேறும் என்பது நம்பிக்கை என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramzan, Tirunelveli