ஹோம் /ஆன்மிகம் /

முன்னாள் படைவீரர்களுக்கு கோவில் பாதுகாப்பு பணி - நாமக்கல் கலெக்டர் முக்கிய தகவல்

முன்னாள் படைவீரர்களுக்கு கோவில் பாதுகாப்பு பணி - நாமக்கல் கலெக்டர் முக்கிய தகவல்

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயது வரையுள்ள முன்னாள் படைவீரர்களின் பெயர்கள் கோவில் பாதுகாப்பு பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருவதாக நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்ட கலெக்டர் தலைமையில், கொடி நாள் விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 2021ஆம் ஆண்டு 100 சதவீதம் கொடி நாள் வசூல் புரிந்த 25 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 2019ஆம் ஆண்டு ரூ.3 லட்சத்திற்கு மேல் கொடி நாள் வசூல் புரிந்த 4 அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், ஆண்டுதோறும் நாடெங்கிலும் டிசம்பர் 7ஆம் தேதி முப்படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. கொடிநாளுக்காக நாடு முழுவதும் மாவட்டந்தோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி திரட்டப்படுகிறது. கொடிநாள் நிதி வசூலில் கடந்த ஆண்டு நமது மாவட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.2 கோடியே 13 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.

ஆனால், அதைவிட அதிகமாக ரூ.2 கோடியே 39 லட்சத்து 4 ஆயிரம் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளோம். இந்த தொகை 112.13 சதவீதம் ஆகும். இந்த பணியயை சிறப்பாக மேற்கொண்ட பணியாளர்களை பாராட்டுகிறேன். 2022ஆம் ஆண்டிற்கு நாமக்கல் மாவட்டத்திற்கு கொடிநாள் வசூல் இலக்காக ரூ.2 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கம் போல் இதற்கு அதிகமாக வசூல் செய்திட அனைத்து துறை அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன். கொடிநாளில் வசூல் செய்யப்படும் நிதி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து 2021ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு விதமான நிதி உதவிகளாக மொத்தம் ரூ.40,93,485 வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முன்னாள் படைவீரர்களுக்கென சிறப்பு வேலை வாய்ப்பு பிரிவு ஒன்று மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. முன்னாள் படை வீரர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களுக்கான கேட்பு பல்வேறு துறைகளிலிருந்து பெறப்பட்டு, பொது தகுதிகள் மற்றும் பதிவு மூப்பின்படியும் அவர்களது பெயர்கள் பரிந்துரை செய்யப்படுகின்றது.

Must Read :ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!

இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 5 முன்னாள் படைவீரர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் 62 வயது வரையுள்ள முன்னாள் படைவீரர்களின் பெயர்கள் கோவில் பாதுகாப்பு பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Namakkal