முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வைகாசி மாத பூஜை ; சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு

வைகாசி மாத பூஜை ; சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவில்

sabarimala Temple Open | வைகாசி மாத பூஜைகாக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கபடுகிறது.

  • Last Updated :
  • Kerala, India

சபரிமலை ஐயப்பன் கோவிலில்  ஒவ்வொரு மாதமும் மாத பூஜைக்காக நடை மலையாளம் மாதம் முதல் நாள் திறக்கப்பட்டு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பங்குனி மாத ஆரட்டு விழாவும், சித்திரை மாத விசு கனி காணும் விழாவும் ஐயப்பன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை 15ஆம்தேதி முதல் 19ஆம் தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: திருப்பதி கோயிலுக்குள் அத்துமீறி வீடியோ எடுத்த நபர் கைது..! - வெளியான பரபரப்பு தகவல்கள்!

இதற்காக கோவில் நடை இன்று 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். நாளை 15ஆம் தேதி முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

சபரிமலையில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: Ayyappan temple in Sabarimala