முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சபரிமலை பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை... சென்னையைச் சேர்ந்தவருக்கு முன்ஜாமின் வழங்க கேரளா வனத்துறை எதிர்ப்பு

சபரிமலை பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை... சென்னையைச் சேர்ந்தவருக்கு முன்ஜாமின் வழங்க கேரளா வனத்துறை எதிர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவில்

Sabarimala | கேரளாவின் பத்தினம்திட்டா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நாரணசாமிக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என கேரளா வனத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Kerala, India

சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதியின்றி பூஜை செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னையை சேர்ந்த நாராயணசாமி கேரளாவின் பத்தினம்திட்டா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஆன்மீக தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ‘மகரஜோதி’ அன்று பக்தர்களுக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிப்பார்.

அப்படி மகரவிளக்கு ஏற்றப்படும் பொன்னம்பலமேடு பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. வனத்துறையினர் அனுமதியின்றி யாரும் இப்பகுதிக்குள் நுழைய முடியாது. இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த நாராயணசாமி உட்பட 5 பேர் அங்கு பூஜை நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க கோரி சென்னையைச் சேர்ந்த நாராயணசாமி பத்தினம்திட்டா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

' isDesktop="true" id="991709" youtubeid="bGUXpxzgXYI" category="spiritual">

இதனிடையே, நாராயணசாமிக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என கேரள வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

top videos
    First published:

    Tags: Bail, Kerala, Sabarimalai