முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ட்ரோன்கள் மூலம் ராம நவமி அன்று மகாவீர் கோவிலில் மலர்கள் தூவ ஏற்பாடு

ட்ரோன்கள் மூலம் ராம நவமி அன்று மகாவீர் கோவிலில் மலர்கள் தூவ ஏற்பாடு

ட்ரோன்

ட்ரோன்

Rama Navami 2023 | ராமநவமி தினத்தன்று மகாவீர் கோவில் முற்றத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம், அதாவது ட்ரோன் மூலம் மலர் மழை பொழியப்படும். த்ரேதா யுகத்தில் மகாவிஷ்ணு ஸ்ரீராமர் அவதாரம் எடுத்தபோது தேவலோகத்தில் இருந்து தேவர்களும் தெய்வங்களும் மலர்களைப் பொழிவதைப் போல இது இருக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாட்னாவில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற மகாவீர் கோவிலில் இந்த ஆண்டு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்ரீராமரின் பிறந்தநாளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட, பாட்னா நகரில் உள்ள மகாவீர் கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. மிகவும் விசேஷமாக, இந்த ஆண்டு இரண்டு அனுமன் சிலைகள் நிறுவப்பட்டுள்ள மகாவீர் கோவிலில், ராம ஜென்மோத்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீராமரின் பக்தர்கள் மலர் மழை பொழியும் அற்புதக் காட்சியைக் காணும் வகையில், சிறப்பு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாவீர் கோவிலில் நடக்கும் ராம் ஜன்மோத்சவ் விழாவையொட்டி பக்தர்கள் மலர் மழை பொழியும் அற்புதமான காட்சியை காண்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டும், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால், அவர்களுக்காக 20 ஆயிரம் கிலோ நைவேத்தியம் தயாரிக்கப்பட்டது. கோவிலில் வரும் பெரிய கூட்டத்தை கையாள, மகாவீர் மந்திரில் இருந்து வீர் குன்வர் சிங் பூங்கா வரை ஒரு பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :  நைட் 10 மணிக்கு மேல் இதெல்லாம் கூடாது... பேச்சுலர்களுக்கு வினோத ரூல்ஸ் போட்ட அபார்ட்மெண்ட் நிர்வாகம்...!

கோவிலின் சடங்குகளின்படி, கருவறை பக்தர்களின் பார்வைக்கு திறக்கப்படுவதற்கு முன்பு ஜாக்ரன் ஆரத்தி நடைபெறும்.

தங்கள் மீது தெய்வங்கள் மலர் மழை பொழிவது போன்ற உணர்வை பக்தர்கள் பெறுவார்கள்;

மஹாவீர் கோவில் செயலாளர் ஆச்சாரியா கிஷோர் குணால் இதைப் பற்றிக் கூறுகையில், ‘இந்த முறை ட்ரோனில் இருந்து வரும் மலர் மழைக்கு பொழிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மத்தியில் ராமர் பிறந்து அருள்வார். பகவான் ஸ்ரீராமரின் பிறந்தநாளை முன்னிட்டு, ராமநவமி தினத்தன்று மகாவீர் கோவில் முற்றத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம், அதாவது ட்ரோன் மூலம் மலர் மழை பொழியப்படும். த்ரேதா யுகத்தில் மகாவிஷ்ணு ஸ்ரீராமர் அவதாரம் எடுத்தபோது தேவலோகத்தில் இருந்து தேவர்களும் தெய்வங்களும் மலர்களைப் பொழிவதைப் போல இது இருக்கும்.

மேலும் படிக்க :  இந்த குளத்தில் குளித்தால் நோய்கள் தீருமாம்... ஒரு கிராம மக்களின் நம்பிக்கை... மேற்கு வங்கத்தில் விநோதம்...!

இதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பகவான் ஸ்ரீராமரின் குழந்தை சிலைக்கு மார்ச் 30 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மலர்களை பொழிவதற்கு ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

விசேஷ நேரத்தில் கருவறை திறந்திருக்கும்;

மேலே குறிப்பிடப்பட்ட இந்த நேரத்தில் கோவில் நீண்ட நேரம் திறந்திருக்கும். மகாவீர் கோயிலின் கருவறை இரவு 2 மணிக்கு திறக்கப்படும் மற்றும் இரவு 12 மணி வரை திறந்திருக்கும். சடங்குகளைத் தொடர்ந்து, கருவறை திறப்பதற்கு முன் ஜாக்ரன் ஆரத்தி நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்கும். ஸ்ரீராமர் பிறந்தநாள் பூஜை காலை 11.50 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் கூறினார்.

மீதியுள்ள கொண்டாட்டங்களான மலர் தூவி இறைவனை வழிபடுதல், ஜன்மோத்சவ் ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை செல்லும். எனவே, இந்த நான்கு மணி நேரத்தில் ராம் ஜன்மோத்சவின் அனைத்து கொண்டாட்டங்களும் முடிந்துவிடும்.

கோயிலில் 12 கவுண்டர்களில் நைவேத்தியம்;

அயோத்திக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் கோவில் இது தான். இக்கோயிலுடன் தொடர்புடைய பக்தர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மகாவீரர் கோயிலுக்கு நான்கு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாத்தின் தேவையை பூர்த்தி செய்ய, 20 ஆயிரம் கிலோ நைவேத்தியம் தயாராகியது. சிரமமின்றி பிரசாதம் வழங்குவதற்காக, மகாவீர் மந்திர் முதல் வீர் குன்வர் சிங் பூங்கா வரை 12 நைவேத்தியம் கவுண்டர்கள் அமைக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ராமநவமி தினத்தன்று கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள், கோயிலின் முகநூல் பக்கமான patna mahavir mandir இல் பிறந்தநாள் மற்றும் பிற கொண்டாட்டங்களின் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசித்தனர்.

First published:

Tags: Patna