முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வசந்த உற்சவத்தின் போது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்தது மழைநீர்.. பக்தர்கள் அவதி..!

வசந்த உற்சவத்தின் போது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்தது மழைநீர்.. பக்தர்கள் அவதி..!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்தது மழைநீர்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்தது மழைநீர்

Rameshwaram Ramanathaswamy Temple | ராமேஸ்வரம் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில்  வசந்த காலங்களை வரவேற்கும் விதமாக வசந்த உற்சவம் ஆறாம் நாளான நேற்று இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. அப்போது இரவு 8 மணி முதல் இன்று காலை வரை தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கன மழையால் நீர்வாத்து அதிகமாக இருந்தது. 

அப்போது திடிரென யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. கோவிலுக்குள் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழை நீர் கோவிலுக்குள் புகுந்ததாலும் பக்தர்கள் அவதி அடைந்தனர். மேலும் கோவில் பிரகாரம் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி  காட்சி அளித்தது.

வசந்த உற்சவம் விழாவின் போது கோவில்  மண்டபத்துக்குள் மழை நீர் புகுந்ததால் மழை நீரோடு சுவாமி அம்பாள் பல்லாக்கில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

Also see... உஷார் மக்களே...! தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

மாதம் பல கோடி ரூபாய் வருமானம் வரும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு ஒரு சரியான மழை நீர் வடிகாலை அமைத்து கோவிலுக்குள் தண்ணீர் புகுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

top videos

    செய்தியாளர்: சேது குமரன், ராமேஸ்வரம்

    First published:

    Tags: Local News, Ramanathapuram