நிழல் கிரகங்களான ராகு - கேது பெயர்ச்சி 2023ம் ஆண்டு அக்டோபர் 30ல் நடக்க உள்ளது. அசுப கிரகங்களாக இருந்தாலும், அதன் அமைப்பு சில ராசியினருக்கு மிகவும் யோக பலனைத் தருவதாக இருக்கும்.
ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அதற்கான பலன்களைத் தரக்கூடியவர்கள். இந்த கிரகங்களோடு சேர்க்கக்கூடிய மற்ற கிரகங்களைப் பொருத்தும் அதற்கான பலன்கள் சிறியளவில் மாறுபடும். எப்போதும் ராகு, கேது மற்ற கிரகங்களின் பலத்தை தனதாக்கிக் கொண்டு பலன் தரக்கூடியவை. அந்த வகையில் சில ராசியினருக்கு பெரியளவில் முன்னேற்றமும், அதிர்ஷ்ட பலனும் கிடைக்கும்.
ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது?
ராகு கேது பெயர்ச்சி 2022ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி நடந்தது. இதில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆனர். 2023 ஆம் ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என மூன்று முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடக்க உள்ளது.
இதில் ராகு கேது பெயர்ச்சி 2023 அக்டோபர் 30ம் தேதி நடக்க உள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி நகரக்கூடியன. இந்த பெயர்ச்சியின் காரணமாக ராகு, குரு பகவானின் ராசியான மீன ராசியிலும், புதன் அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளனர்.
Also see... குரு பெயர்ச்சி 2023: மீனம் டூ மேஷம்.. இடம் மாறும் கிரகம்.. தேதி, நேரம் குறித்த தகவல்கள்!
அசுப கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என ராகு கேது அழைக்கப்பட்டாலும், அவை அமர்ந்துள்ள ராசி மற்றும் அவற்றுடன் சேரக்கூடிய கிரகங்களைப் பொறுத்து அவை சில நேரங்களில் மிகவும் சிறப்பான பலன்களைத் தரக்கூடியவர்களாக இருப்பார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahu Ketu Peyarchi