முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்... ஒரு வாரம் திருவிழா...!

திருப்பதி கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்... ஒரு வாரம் திருவிழா...!

திருப்பதி கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்...

திருப்பதி கங்கையம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்...

Tirupati | மே16ஆம் தேதி கோவில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில், நேற்று திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர் ரெட்டி, கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்தார்.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதியில் உள்ள கங்கை அம்மன் கோயில் வருடாந்திர திருவிழா இம்மாதம் 16ஆம் தேதி துவங்கி ஒரு வார காலம் நடைபெற உள்ளது. ராயல் சீமா பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் முக்கியமான திருவிழா திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா ஆகும்.

இந்த திருவிழா நடைபெறும் ஏழு நாட்களும் பக்தர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வேஷம் போட்டு வந்து கங்கை அம்மனை தரிசிப்பது வழக்கம். இந்த நிலையில் கங்கை அம்மன் கோவில் சீரமைக்கப்பட்டு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

காங்கை அம்மன் கோவிலில் பட்டு வஸ்திரம் சாத்துதல்

இம்மாதம் 16ஆம் தேதி துவங்கி கோயில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் நேற்று திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர் ரெட்டி, கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்தார்.

மேலும் படிக்க... திருப்பதி ஏழுமலையானுக்கு ஜம்முவில் கோவில்... ஜூன் 8ல் கும்பாபிஷேகம்

இதற்காக நகர வீதிகள் வழியாக குடும்பத்துடன் பட்டு வஸ்திரத்தை தலை மீது சுமந்து வந்த அவர் அவற்றை கங்கையம்மனுக்கு சமர்ப்பித்தார்.

top videos

    செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

    First published:

    Tags: Tirumala Tirupati