சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமானது பிரதோஷ பூஜை. திரயோதசி திதி அன்று பிரதோஷ நாளாகக் கொண்டாடுகிறோம். திரயோதசி திதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தில் பிரதோஷ பூஜை செய்யப்படும். அதாவது திரயோதசி திதி நாளில், பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30மணி முதல் 6 மணி வரையிலான நேரம்.
இந்த நேரத்தில், அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு விமரிசையாக செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்று சிவபுராணம் கூறுகிறது. அந்த வகையில் இன்று புதன் கிழமை சித்திரை மாத வளர்பிறை பிரதோஷம். புதன் கிழமை அன்று வரக்கூடிய இந்த பிரதோஷம், நமக்கு பொன்னும் பொருளும் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று பிரதோஷ விரதம் இருப்பவர்கள் சிவ புராணம் படித்தும் நமசிவாய மந்திரம் சொல்லியும் சிவபெருமானை வழிபடலாம். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், சிவபுராணம் படித்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் சொல்லிக் கொண்டே இருப்பதும் மகா புண்ணியம் தரும்.
புதன் கிழமை பிரதோஷ நன்னாளில் கட்டாயம் செய்ய வேண்டியவை
1. மறக்காமல் சிவ தரிசனம் செய்வது நல்லது. நந்திதேவருக்கு அருகம்புல் சார்த்தி சிவலிங்கத்திற்கு வில்வம் சார்த்தி வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
2. பிரதோஷத்தின் போது, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.
3.நம்மால் முடிந்த நைவேத்தியப் பொருட்களை வழங்கி சிவ தரிசனம் செய்வது இன்னும் பல நன்மைகளை வழங்கும்.
4. பிரதோஷ நன்னாளில் எவருக்கேனும் தயிர்சாதப் பொட்டலத்தை வழங்குங்கள். பசுவுக்கு பழங்கள் ஏதேனும் வழங்குவது நல்லது.
5. இப்படி செய்வதன் மூலமாக தென்னாடுடைய சிவனாரின் பேரருள் கிடைக்கும். பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று வாழ்வில் உயரலாம் என்பது நம்பிக்கை..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, Sivan