முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சபரிமலை பொன்னம்பல மேட்டில் பூஜை நடந்த விவகாரம்... வன ஊழியர்கள் இருவர் கைது..!

சபரிமலை பொன்னம்பல மேட்டில் பூஜை நடந்த விவகாரம்... வன ஊழியர்கள் இருவர் கைது..!

சபரிமலை

சபரிமலை

Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயில் பொன்னம்பலமேட்டில் சிலர் பூஜை செய்த விவகாரத்தில், அவர்களுக்கு உதவியதாக கேரளா வன ஊழியர்கள் இருவரை கைது செய்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Kerala, India

ஆன்மீக தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ‘மகரஜோதி’ அன்று பக்தர்களுக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிப்பார்.

இந்த ஜோதி தெளியும் சபரிமலையின் ஒரு பகுதியான பொன்னம்பலமேட்டில் சட்டவிரோதமாக நுழைந்து சிலர் பூஜை செய்ததாக வெளியான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மீது கேரளா வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாராயணன் என்பவர் தலைமையில் இந்த பூஜை நடைபெற்றது தெரியவந்துள்ளது. உரிய அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து சட்ட விரோதமாக பொன்னம்பலமேட்டில் பூஜைகள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவிதா்கூர் தேவசம் போர்டு விளக்கம் அளித்தன.

சபரிமலை

இந்த பூஜையை செய்த நாராயணன், ஒரு வாரத்திற்கு முன்பு பொன்னம்பலமேட்டிற்கு வந்து பூஜை செய்தாகவும், இவர் இதற்கு முன்பு சபரிமலையில் மேல்சாந்தியின் உதவியாளராக பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையரை, விசாரணை மேற்கொண்டு அவசர அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி காவல்துறைக்கு புகார் அளிக்க உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கே.அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.

பூஜை செய்யப்பட்ட வீடியோ

' isDesktop="true" id="982008" youtubeid="B6H_jhxJBcE" category="spiritual">

தலைமறைவான நாராயணன் உட்பட நபர்களை தேடி வரும் நிலையில் நாராயணன் நேற்று முந்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசியதாவது: ”சந்நியாசியான நான் திருச்சூரில் வசித்து வருகிறேன். தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று பூஜை செய்து வருகிறேன். அதன் அடிப்படையில் பொன்னம்பலமேட்டுக்குப் போகும் சூழ்நிலை கிடைத்தது. இப்படி பூஜை செய்ய போகும் இடங்களெல்லாம். அய்யப்பன் அருள் பெற்றதால் தான் பொன்னம்பலமேட்டில் பூஜை செய்ய முடிந்தது. ஆனால் அங்கு எந்த தவறும் செய்யப்படவில்லை. பூஜை செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை” எனவும் ஐயப்பன் ஆசி பெற உயிரை இழக்கவும் தான் தயார் எனவும் அந்த வீடியோவில் கூறி இருந்தார்.

மேலூம் படிக்க... திருப்பதி தரிசன டிக்கெட் கிடைக்கவில்லையா..? இப்படி பண்ணுங்க.. ஏழுமலையானை ஈஸியாக தரிசிக்கலாம்..!

பூஜை செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பொன்னம்பலமேடு வனப்பகுதிக்கு பூஜை செய்தவர்களுக்கு உதவியதாக கேரள வனத்துறையை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் ஷாபு மேத்யூ ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

top videos

    சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இடையே இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சபரிமலையில் ஐதீகம் கெட்டு விட்டதாகவும் இதற்கு தேவப்பிரசன்னம் மூலம் தீர்வு காண வேண்டும் என்பது பக்தர்களின் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து உள்ளது.

    First published:

    Tags: Ayyappan temple in Sabarimala, Kerala. Sabarimala, Sabarimala, Sabarimala Ayyappan