முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Exclusive : சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜையா? - தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு..!

Exclusive : சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜையா? - தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு..!

சபரிமலை

சபரிமலை

Sabarimalai | நியூஸ் 18-க்கு கிடைத்த பிரத்யேக வீடியோவில், நாராயணசாமி தலைமையில் பூஜை நடைபெறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

  • Last Updated :
  • Kerala, India

சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை செய்த விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மீது கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலையில், மகரவிளக்கு ஏற்றப்படும் பொன்னம்பலமேடு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

வனத்துறை மற்றும் காவல்துறையினர் அனுமதியின்றி யாரும் நுழைய முடியாத இந்த பகுதியில், தமிழ்நாட்டில் தனியாக கோயிலை நிர்வகித்து வருபவரான நாராயணசாமி உள்ளிட்ட 5 பேர் பூஜை நடத்திய வீடியோ வெளியானது.

நியூஸ் 18-க்கு கிடைத்த பிரத்யேக வீடியோவில், நாராயணசாமி தலைமையில் பூஜை நடைபெறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், இந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

தேவசம்போர்டு அளித்த புகாரின் பேரில், கேரள மாநில காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதே போன்று, அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்ததாக 5 பேர் மீதும் வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

' isDesktop="true" id="979882" youtubeid="B6H_jhxJBcE" category="spiritual">

மேலும் படிக்க... திருப்பதியில் அதிகரிக்கும் கூட்டம்... தரிசனத்துக்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்...!

இதனிடையே, பொன்னம்பலமேடு பகுதியில் பூஜையில் ஈடுபடவில்லை என நாராயணசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

top videos

    பொன்னம்பலமேட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்காததால், வேறொரு பகுதியில் பூஜை நடத்தியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    First published:

    Tags: Sabarimalai, Sabarimalai Ayyappan temple