முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தமிழ் புத்தாண்டு : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

தமிழ் புத்தாண்டு : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!

பிள்ளையார்பட்டி

பிள்ளையார்பட்டி

மூலவர் தங்க கவசத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Karaikkudi (Karaikudi), India

புகழ் பெற்ற குடவரை கோவிலில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் சித்திரை முதல் நாள் ஸ்ரீ சோபகிருது தமிழ் வருடபிறப்பதை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு மூலவர் கற்பக விநாயகருக்கு  சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பிறகு மூலவர் தங்க கவசத்திலும்  உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி காட்சியளிளித்து வருகின்றனர். இந் நிலையில்  தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் அதிகாலையில் விநாயகர் பெருமானை தரிசித்து வருகின்றனர்.

தொழில் வணிகம் சிறப்பாக நடைபெற கோயில் வளாகத்தில் அமர்ந்து புது கணக்கு  தொடங்கி விழிபாடும் செய்து வருகின்றனர். மேலும் பல தலைமுறைகளாக முன்னோர்கள் சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக கடைபிடித்து வந்ததாகவும் அதை தாங்களும் கடைபிடித்து வருவதால் முதற்கடவுளாகிய விநாயகர் பெருமானை  தரிசிக்க பிள்ளையார்பட்டி  வந்துள்ளோம் என்றும்  கூறுகின்றனர்.

Also see... தமிழ் புத்தாண்டு 2023... செய்ய வேண்டியவைகளும் செய்யக் கூடாதவைகளும்..!

மேலும் இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் வெள்ளி பல்லக்கில் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க சிவனின் பிரதிநிதியாகிய அஸ்திர தேவரும், விநாயகரின் பிரதிநிதியாகிய அங்குசத்தேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள குளத்தில் உள்ள படித்துறைக்கு வருகை தந்து அங்கு தலைமை சிவாச்சாரியார் தலைமையில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் நடைபெற இருக்கிறது.

செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி

First published:

Tags: Karaikudi, Tamil New Year