முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருமணம் தாமதமாகிறதா? அப்படியென்றால் இது உங்களுக்கு தான்!

திருமணம் தாமதமாகிறதா? அப்படியென்றால் இது உங்களுக்கு தான்!

கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி

கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி

சோழர்களின் சாப விமோசனத்திற்காக  கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கு மாநிலங்களில் பல புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான கோயில்கள் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளன. அப்படி ஒரு கோயிலை பற்றி தான் இங்கு குறிப்பிடுகிறோம்.

இக்கோயில் சித்தூர் மாவட்டம், பலமனேரு தொகுதியில், பைரெட்டிப்பள்ளி மண்டலம், பேலுபள்ளி ஊராட்சியில் உள்ள பட்னபள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவில் தான் அது. இது ஒரு தனித்த அடையாளத்தை கொண்டுள்ளது. குறிப்பாக நீண்ட நாள் திருமணமாகாதவர்களுக்கு இக்கோயிலில் நல்வழி கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், இந்த கோவிலுக்கு வரலாறும் அதிகம். இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.

இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெறும். இங்குள்ள கோவிலின் சிறப்பு என்னவென்றால், இரு தெய்வங்களுடன் பிருந்தாவன வடிவில் சுவாமி தரிசனம் தருகிறார். கோவில் வளாகத்தில் உள்ள இறைவனுக்கு அபிஷேகம், பூஜைகள், நெய்வேத்தியம் உள்ளிட்டவைகள் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து கோயில் அர்ச்சகர்கள் முரளிச்சார்யா, ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோர் கூறுகையில், ”ஆந்திராவில் 11ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட ஏராளமான கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் ஹஸ்தகிரி கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி, மகாலட்சுமி மற்றும் பத்மாவதியம்மாவுடன் பிருந்தாவனத்தில் நீராடினார். சோழர்களின் சாப விமோசனத்திற்காக  கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது” என்றனர்.

குழந்தை இல்லாதவர்கள், திருமணமானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து காப்பு கட்டினால் வேண்டுதல் நிச்சயம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின், மீண்டும் இந்த கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது விசேஷம். குறிப்பாக திருமணமாகாத இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் இங்கு வந்து தங்களது விருப்பம் நிறைவேற வேண்டி, சுவாமிக்கு பட்டாடை செலுத்தி செல்வதாக உள்ளூர் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் இங்குள்ள பட்டாடை விற்பனை கடைகள் எப்போதும் பிஸியாக இருக்கும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Tirumala Tirupati