முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Lunar Eclipse 2023: சந்திர கிரகணம் எப்போது? தேதி, நேரம் குறித்த முழு தகவல்கள்...

Lunar Eclipse 2023: சந்திர கிரகணம் எப்போது? தேதி, நேரம் குறித்த முழு தகவல்கள்...

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

Lunar Eclipse 2023 | சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சந்திர கிரகணம் 2023 மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நிகழ உள்ளது. இந்த ஆண்டில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம் இது. இந்த கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட உள்ளது. இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும் வகையில் ஏற்பட உள்ளது. 

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரன் கிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியன் - சந்திரன் இடையே ஒரே நேர் கோட்டில் பூமி வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால், அது மறைக்கப்படும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கிறோம்.

முதல் சந்திர கிரகணம் எப்போது?

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2023 மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை சித்திரை பெளர்ணமி அன்று ஏற்படுகிறது.

சந்திர கிரகணத்திற்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

ராகு - கேது நிழல் கிரகங்களாகும். எப்போதெல்லாம் ராகு அல்லது கேது உள்ள ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் சஞ்சரிக்கும் போது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படும் என்பது அறிவியல் மட்டுமல்ல ஜோதிடத்தின் அம்சத்தை எளிதாக கூறுகிறது.

இதைத் தான் ஜோதிடத்தில் ராகு சூரியனை விழுங்குகிறது. சந்திரனை விழுங்குகிறது என கூறுகின்றனர்.

பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?

இந்த சந்திர கிரகணம் உலகில் 5 கண்டங்களில் நன்றாக பார்க்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும். மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி சந்திர கிரகணம் நிகழும் நேரம்

top videos

    இந்திய நேரப்படி இந்த பகுதி சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52.59 மணிக்கு ஏற்படும். இந்த கிரகணம் மே 6ம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறைவடைகிறது.

    First published:

    Tags: Lunar eclipse