பங்குனி மாதத்தில் வரும் அனைத்து திதி தினங்களும் இறை வழிபாடு, பூஜைகள் செய்வதற்கு ஏற்றதாக இருப்பதால் பல கோயில்களில் விழாக்களும், வைபவங்களும் இந்த மாதம் முழுவதும் நடைபெறும். அப்படியான பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதோஷம் சிறப்பான ஒரு தினமாகும்.
இந்த பங்குனி வளர்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவனை வணங்க வேண்டும். பிறகு நந்தி தேவர் மற்றும் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருதல் நல்லது.
பின்னர் பிரதோஷ வேளை பூஜையின் போது நந்தி தேவர், சிவபெருமான், மற்றும் பார்வதி தேவியை வணங்க வேண்டும். நவக்கிரக சந்நிதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி பூக்கள் சாற்றி, பீட்ரூட் சாதம் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு இனிப்பு, பொங்கல், சுண்டல் என முடிந்தவற்றை அன்னதானம் வழங்குவது நல்லது.
தோஷங்கள் நீங்கும்
இன்றைய பங்குனி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் உங்களுக்கு ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷ பாதிப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். நேரடி, மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும். உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் நீங்கி உடல் பலம் கிட்டும். மனோதைரியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sivan