முகப்பு /செய்தி /ஆன்மிகம் / அந்தமான் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா: கைக்குழந்தையுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்!

அந்தமான் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா: கைக்குழந்தையுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்!

அந்தமான் முருகன் கோவில்

அந்தமான் முருகன் கோவில்

Andaman Panguni Uthira Festival | அந்தமானில் உள்ள வெற்றி மலை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவில், தமிழர்கள் அலகுகள் குத்தியும், தீ மிதித்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய யூனியன் பிரதேசமாக இருக்கும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைநகரமான ஃபோர்ட் பிளேயரில் வெற்றிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு அதிகளவு வசித்த தமிழர்களுக்காக கட்டப்பட்ட இக்கோயில், இந்துக்களின் முக்கியமான வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

முருகன் வழிபாட்டில் பிரசித்திப் பெற்ற கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் இங்கு கோலாகலமாக நடத்தப்படுகின்றன.

தற்போது, பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, மாலையணிந்து, விரதம் இருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், அலகுகள் குத்தியும், காவடிகள் தூக்கியும், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

"முருகனுக்கு அரோகரா" கோஷங்கள் விண்ணதிர, கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழி எனப்படும் தீக்குண்டத்தில் இறங்கி தமிழர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Also see... இன்று பங்குனி உத்திரம்... சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க குல தெய்வத்தை வணங்குங்கள்...!

பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி, முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் கமிட்டி சார்பில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

top videos

    அந்தமானில் நடந்த பங்குனி உத்திர திருவிழா, அங்கு வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்லாது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது.

    First published:

    Tags: Andaman And Nicobar Islands S33p01, Murugan temple