முகப்பு /செய்தி /ஆன்மிகம் / பங்குனி உத்திர திருவிழா: நெல்லையப்பர் கோயிலில் விமர்சையாக நடந்த செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி..!

பங்குனி உத்திர திருவிழா: நெல்லையப்பர் கோயிலில் விமர்சையாக நடந்த செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி..!

Panguni Uthiram 2023 | பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், நெல்லையப்பர், அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக செங்கோல் வழங்கும் விழா ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினர்.

அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி நகரை ஆட்சி செய்யும் பொறுப்பை சுயம்புவாக உருவான நெல்லையப்பருக்கு கோயில் கட்டிய ராமன் பாண்டிய மன்னனிடம் ஒப்படைக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நெல்லைப்ப்பர் கோயில் செயல் அலுவலருக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

Also see... பங்குனி உத்திரம் 2023 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...

top videos

    இதேபோல, நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள குடவரை கோயில்களில் ஒன்றான குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோயிலில் வள்ளி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Nellai