முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இன்று பங்குனி அமாவாசை... பித்ரு சாபம் நீங்க முன்னோர்களை வழிபடுங்கள்...!

இன்று பங்குனி அமாவாசை... பித்ரு சாபம் நீங்க முன்னோர்களை வழிபடுங்கள்...!

தை அமாவாசை

தை அமாவாசை

Panguni Amavasai | பங்குனி அமாவாசை தினத்தில் விரதம் இருந்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும் என்பதும் முன்னோர்கள் ஆசியோடு பல தடைகள் விலகும் என்பதும் நம்பிக்கை.

  • Last Updated :

அமாவாசை திதி மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். அதிலும் பங்குனி மாதம் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த பங்குனி மாத அமாவாசையானது இன்று அதாவது மார்ச் மாதம் 21.03.2023 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை முழுவதும் இருக்கின்றது.  பங்குனி அமாவாசை தினம் என்பது சைத்ர அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சைத்ர அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்தால் மிகவும் நல்லது என்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் என்றும் வேலையில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பங்குனி மாதம் பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். அந்த வகையில் இந்த மாதத்தின் அமாவாசை நாளான இன்று முன்னோர்களுக்கு ஆராதனை, தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம். அதுமட்டுமல்லாமல் விரதம் இருந்து வழிபட்டால் பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

மேலும் நாகம் என்றாலே அது ராகுவை குறிக்கிறது. இந்த தினத்தன்று நாக தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், தீராத தோல் வியாதிகள் உள்ளவர்களும் சிவபெருமானை வணங்கி, சிவன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி, சிவனைத் வணங்குவதன் மூலம் பித்ரு சாபத்தில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம்.

Also see... ராகு-கேது பெயர்ச்சி 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்?

top videos

    மேலும் இன்று குறைந்தது மூன்று பேருக்காவது வயிறு நிரம்ப சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அன்னதானம் செய்ய வேண்டும். அது நிறைவான அன்னதானம் ஆக இருக்க வேண்டும். அதனால் தலைமுறை செழிக்கும். நல்ல வளமுடன் வாழலாம்.

    First published:

    Tags: Hindu Temple, Worship forefathers