அனைவருடைய வாழ்விலும் மிக முக்கியமான வழிபாடு என்பது குலதெய்வ வழிபாடு மற்றும் முன்னோர்கள் வழிபாடு. சூரியன் இருக்கும் அதே பாகையில் சந்திரன் வரும் நாள் அமாவசை என்று அழைக்கப்படுகிறது. இதில் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மஹாளயபக்ஷ அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் முன்னோர்கள் வழிபாடு செய்வது மிகுந்த நன்மை தரும். இதே போல் சூரியனுக்கு நேர் எதிர் பாகையான 180 டிகிரியில் சந்திரன் வரும் நாள் பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. அனைத்து பௌர்ணமி நாட்களுமே ஏதேனும் ஒரு விழாவாக நமது முன்னோர்கள் வழங்கி விட்டு சென்றிருக்கிறார்கள்.
அந்த வகையில்,
1. சித்திரை - சித்திரா பௌர்ணமி
2. வைகாசி - வைகாசி விசாகம்
3. ஆனி - ஆனி மூலம்
4. ஆடி - ஆடி திருவோணம்
5. ஆவணி - ஆவணி அவிட்டம்
6. புரட்டாசி - புரட்டாசி உத்திரட்டாதி
7. ஐப்பசி - ஐப்பசி பரணி
8. கார்த்திகை - திருக்கார்த்திகை
9. மார்கழி - மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்)
10. தை - தைப் பூசம்
11. மாசி - மாசி மகம்
12. பங்குனி - பங்குனி உத்திரம்
பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் நம்முடைய குலதெய்வத்தினை வணங்குவது நமது மரபு. நம் வேண்டுதல்களை குலதெய்வம் நிறைவேற்றித் தரும். நம் குலத்தைத் தலைமுறை தலைமுறையாக காக்கும். சகல ஐஸ்வர்யங்களுடன் நம்மை வாழவைக்கும்.
இன்று ஏப்ரல் 5 ஆம் தேதி பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது. குலதெய்வத்திற்கு படையலிட்டு நண்பர்களுக்கும் - உறவினர்களுக்கு - அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குவது பலவிதமானநன்மைகளை தரும். அதனால் நம் பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போகும்.
ஒருவரின் வாழ்வில் தடைகள் அகல செய்ய வேண்டிய மிக முக்கியமான வழிபாடு என்பது குலதெய்வ வழிபாடாகும். நம் குலம் தழைக்க ஒரு தெய்வத்தை வழிபட்டுக் கொண்டே வருவதுதான் குலதெய்வம். தலைமுறைகள் கடந்தும் நடந்து கொண்டிருக்கிற வழிபாடுதான் குலதெய்வ வழிபாடு. குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் வணங்கி வழிபட்டு வந்த தெய்வமாக இருக்கலாம். அல்லது நம் முன்னோர்களையே தெய்வமாக பரம்பரை பரம்பரையாக வணங்கி வழிபட்டு வந்ததாகவும் இருக்கலாம்.
Also see... பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்..!
நம் கண்ணீரையும் தோல்விகளையும் துடைப்பதற்கும் மாற்றுவதற்கும் ஓடோடி வந்து காப்பாற்றுவதுதான் குலதெய்வம். குலதெய்வக் கோயிலுக்குச் செல்வதையும் குலதெய்வத்தை ஆராதித்து வணங்குவதையும் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ விடுமுறை காலங்களிலோ அல்லது வருடத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வ வழிபாட்டைச் செய்ய வேண்டும்.
கோயில் பூர்வீக கிராமத்தில் இருக்கலாம். நாம் எங்கோ வாழ்ந்து வரலாம். வீட்டில் இருந்துகொண்டே வீட்டில் இருந்தபடியே நாம் தலைமுறை தழைக்க குலதெய்வ வழிபாட்டைச் செய்யலாம். ஏதேனும் ஒரு கிழமையை தேர்வு செய்துகொண்டு அந்த நாளில், நம்முடைய முன்னோர்களின் வழக்கப்படி வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
முக்கியமாக, பங்குனி பெளர்ணமியும் உத்திரமும் இணைந்த அற்புதமான இந்த நாள் குலதெய்வ வழிபாட்டுக்கு ரொம்பவே உன்னதமான நாள். இந்த நாளில், நம் வீட்டைச் சுத்தப்படுத்தி, குலதெய்வப் படங்களுக்கு மாலைகளிட்டு அலங்கரித்து, இனிப்பு மற்றும் உணவுடன் படையலிட வேண்டும். இதனால் நம் துன்பங்கள் அனைத்தும் சூரியனை கண்ட பனித்துளியாய் காணாமல் போகும் என்பது ஐதிகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Murugan